OTTயில் வெளியாகும் தனுஷின் அடுத்த படம்.. எவளோ அடி வாங்குனாலும் தாங்குறாங்களே

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான தனுஷ். தற்போது இவர் மாறன் மற்றும் திருச்சிற்றம்பலம் உட்பட ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். மேலும் தெலுங்கில் ஒரு படத்தில் நடிப்பதாக தகவல் வெளியானது.

ஆனால் தனுஷ் தற்போது இந்திய சினிமாவில் முக்கியமான நடிகர்கள் பட்டியல் இணைந்துள்ளார் என்றுதான் கூற வேண்டும் ஏனென்றால் அந்த அளவிற்கு ஏராளமான படங்களில் நடித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் தெலுங்கு, பாலிவுட் என அனைத்து மொழியிலும் தனது நடிப்பு பயணத்தை தொடர்ந்து வருகிறார்.

தனுஷ் ஏற்கனவே பாலிவுட் சினிமாவில் ராஞ்சனா படத்தின் மூலம் அறிமுகமானார். தற்போது ஹாலிவுட்டில் தீ கிரே மேன் எனும் படத்திலும் நடித்து வருகிறார். மேலும் தனுஷ் பல வருடங்களுக்குப் பிறகு பாலிவுட்டில் அட்ரங்கி ரே எனும் படத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தில் தனுஷுடன் இணைந்து அக்ஷய்குமார், சைப் அலிகான் உட்பட பல நடிகர்கள் நடித்துள்ளனர். படக்குழுவினர் இப்படத்தை திரையரங்கில் வெளியிட முடிவு செய்தனர். ஆனால் ஒரு சில காரணங்களால் தற்போது இப்படத்தை OTTதளத்திற்கு கொடுத்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

அதாவது இப்படத்தை நெட்பிளிக்ஸ் தளத்திற்கு கொடுத்துள்ளனர். இதனால் தனுஷின் நடிப்பு உலக அளவில் ரசிகர்கள் பார்க்கப்படும் என தனுஷ் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கூறி வருகின்றனர். மேலும் இப்படத்தில் தனுஷின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்படும் எனவும் கூறி வருகின்றனர்.

ஆனால் ஒரு சில ரசிகர்கள் ஏற்கனவே நெட்பிளிக்ஸ் தளத்தில் ஜகமே தந்திரம் திரைப்படம் வெளியானது. அப்போதுகூட நெட்பிளிக்ஸ் தளத்தில் படம் வெளியானதால் படம் வெற்றிபெறும் என கூறினோம். ஆனால் ஜகமே தந்திரம் அடைந்த தோல்வி பெரும் தோல்வி. ஆனால் திரும்பவும் தனுஷ் படம் வெளிவருவது பெரும் ஆச்சர்யம்தான். OTT எவளோ அடி வாங்குனாலும் தாங்குராங்களே மொமென்ட்தான்.

தளபதியின் முதல்நாள் வசூலை தட்டி தூக்கி அண்ணாத்த.. அடேங்கப்பா கபாலிக்கு பின் செய்த சாதனை

என்னதான் படங்கள் நெகட்டிவ் விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக முதல் நாளில் வெற்றி பெற்ற படங்களின் வரிசையில் தற்போது பார்க்கலாம். இந்த வரிசையில் தற்போது அண்ணாத்த முதல் இடத்தை பிடித்துள்ளது. அதாவது முதலிடத்தில் இருந்த ...
AllEscort