96 பட ஹிந்தி ரீமேக்கில் நடிக்கப் போவது யார் தெரியுமா.? செம்ம பிட்டான ஹீரோ.!

விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் 96. இப்படத்தில் விஜய் சேதுபதி நடிப்பு ரசிகர்களை பெரிய அளவில் வரவேற்பு பெற்றது. பள்ளி பருவ காதலை மையமாக கொண்டு உருவான இப்படம் பல ரசிகர்களாலும் பாராட்டப்பட்டது.

மேலும் இப்படத்தில் திரிஷாவின் நடிப்பும் படத்தின் வெற்றிக்கு பக்கபலமாக அமைந்தது அதுவும் விஜய் சேதுபதி மற்றும் திரிஷா இவர்கள் இருவரும் இணைந்து நடித்த காதல் காட்சிகள் இன்றுவரை சமூகவலைதளங்களில் வரவேற்பு பெற்று தான் வருகின்றன. அந்த அளவிற்கு இப்படம் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்றது.

தமிழில் வெளியான இப்படம் அதன் பிறகு தெலுங்கில் ஜானு என்னும் பெயரில் சர்வானந்த் மற்றும் சமந்தா நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது இப்படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்யவுள்ளனர்.

இப்படத்தில் விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் அஜய் கபூர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு கூடிய விரைவில் தொடங்கும் எனவும் தற்போது இப்படத்தில் மற்ற கதாபாத்திரங்களுக்கு நடிகர்கள் தேர்வு செய்து வருவதாகவும் கூறியுள்ளனர்.

மேலும் இப்படத்தை ஒரு சில மாற்றங்கள் செய்து கதைக்கு ஏற்றபடி பாடல்களை உருவாக்க திட்டமிட்டிருப்பதாகவும். இப்படத்தின் படப்பிடிப்பு கூடிய விரைவில் துவங்கி ஒரு சில மாதங்களில் படப்பிடிப்பை முடித்து படத்தை வெளியிட திட்டமிட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மண்டை மேல இருக்க கொண்டைய மறந்துட்டியே கோபி.. வசமாக சிக்கிய பிளேபாய்!

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் இனியாவிற்கு தனி அறை வேண்டும் என்பதற்காக குடும்பத்தினரின் வற்புறுத்தலால் தற்போது கோபி தன்னுடைய மனைவியுடன் ஒரே ரூமில் தங்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இவ்வளவு நாள் தன்னுடைய அறையில் தனியாக ...
AllEscort