96 இசையமைப்பாளருக்கும் ஜகமே தந்திரம் நடிகைக்கும் உள்ள தொடர்பு.. வெளிப்படையாக பதிவு போட்ட நடிகை

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியாகும் புகைப்படங்கள் பலவிதமான கருத்துகளை மக்களிடையே ஏற்படுத்தும். ஆனால் அந்த புகைப்படம் அல்லது வீடியோ வேறு கோணமாகஇருக்கும். அந்த வகையில் தற்போது இணையதளத்தில் தீயாக பரவி வரும் ஒரு புகைப்படத்தின் தகவல்களை பார்ப்போம்.

இந்திய சினிமாவின் பிரபல நடிகையான ஐஸ்வர்யா லக்ஷ்மியின் பிறந்தநாள் புகைப்படம் தான் தற்போது வைரலாகி வருகிறது. அதில் அவருடன் நெருக்கமாக இருக்கும் இசையமைப்பாளரின் உறவு பற்றி தகவல்கள் கிடைத்துள்ளன.

மலையாளத்தில் அறிமுகமாகி தற்போது தமிழ் திரைப்படங்களிலும் நடித்து வருபவர். ஐஸ்வர்யா லட்சுமி இவர் மருத்துவம் படித்தவர். ஸ்ரீ நாராயணா மருத்துவ கல்லூரியில் மருத்துவ படிப்பை முடித்தவர்.

ஐஸ்வர்யா லட்சுமி தன்னுடைய 31வது பிறந்தநாளை கொண்டாடினார். அப்போது ஒரு ரெஸ்டாரன்டில் தன்னுடைய நண்பரான 96 படத்தின் இசையமைப்பாளரான கோவிந்த் வசந்தாவுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் பரவி வருகிறது.

கோவிந்த் வசந்தா மலையாளம் மற்றும் தமிழ் திரைப்படங்களில் இசை அமைப்பாளராக இருந்து வருகிறார். விஜய் சேதுபதியின் 96 படத்தின் இசையமைப்பாளராக இருந்தார். அதை தொடர்ந்து விஜய்சேதுபதியின் சீதகாதி, துக்ளக் தர்பார் போன்ற படங்களுக்கு இசை அமைத்தார்.

நடிகை ஐஸ்வர்யா லட்சுமியும் கோவிந்த் வசந்தாவும் உறவினர்கள் என்று தெரியவந்துள்ளது. ஐஸ்வர்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கோவிந்த் உடன் சேர்ந்து இருக்கும் புகைப்படங்களை அவரை அண்ணன் என்றுதான் பதிவிட்டிருக்கிறார் என்பது குறிப்பிடதக்கது. ஐஸ்வர்யா லட்சுமி தற்போது மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் பூங்குழலி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

AllEscort