தமிழ் சினிமாவில் சற்குணம் இயக்கத்தில் விமல் நடிப்பில் வெளியான களவாணி படம் மூலமாக ஹீரோயினாக அறிமுகமானவர் தான் நடிகை ஓவியா. அறிமுகமான முதல் படமே மாபெரும் வெற்றி பெற்றதால், தொடர்ந்து புதிய படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வந்தார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென மார்க்கெட் இல்லாமல் காணாமல் போனார்.

அந்த சமயத்தில் தான் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பை ஓவியாவும் சிறப்பாக பயன்படுத்தி கொண்டார். இதுவரை எந்த ஒரு நடிகைக்கும் கிடைக்காத புகழ் இந்த நிகழ்ச்சி மூலம் ஓவியாவிற்கு கிடைத்தது. ரசிகர்கள் அவரை தலையில் தூக்கி வைத்து கொண்டாடினார்கள். புகழின் உச்சத்திற்கே ஓவியா சென்று விட்டார்.

ஆனால் அந்த புகழை அவர் சயியாக பயன்படுத்தவில்லை. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் களவாணி 2, காஞ்சனா 3, 90 எம்.எல் உள்ளிட்ட படங்களில் நடித்த ஓவியாவிற்கு அதன் பிறகு எந்த ஒரு பட வாய்ப்பும் கிடைக்கவில்லை. ஏனெனில் இவர் நடிப்பில் வெளியான படங்கள் எதுவும் இவருக்கு கைகொடுக்கவில்லை.

தற்போது பட வாய்ப்புகள் இல்லாமல் உள்ள ஓவியாவை சமீபகாலமாக எந்த ஒரு மீடியாவிலும் பார்க்க முடியவில்லை. இந்நிலையில் தான் சமீபத்தில் ஒளிபரப்பான பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக வந்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்தார். தற்போது முன்னணி காமெடி நடிகர் யோகி பாபு உடன் இணைந்து புதிய படத்தில் நடிக்க உள்ளதாக ஓவியா அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

பட வாய்ப்புகள் இல்லாததால் முன்னணி நடிகர்களுடன் மட்டுமே இணைந்து நடிக்க வேண்டும் என்ற தனது கொள்கையை ஓவியா சற்று தளர்த்தி உள்ளார். அதன் காரணமாகவே கிடைத்த வாய்ப்பை விடாமல் யோகி பாபுவிற்கு ஒகோ கூறியுள்ளார். அன்கா மீடியா தயாரிப்பு நிறுவனத்தின் முதல் படமான இப்படத்தில் யோகி பாபு மற்றும் ஓவியா இணைந்து நடிக்கின்றனர். வரும் செப்டம்பர் 24ஆம் தேதி காலை 9 மணிக்கு சாலிகிராமத்தில் உள்ள பாலுமகேந்திரா ஸ்டூடியோவில் படத்தின் பூஜை நடைபெற உள்ளது.