90களில் ஆதிக்கம் செலுத்திய ஜோடி.. பிரபு, குஷ்பூ நடிப்பில் வெற்றி பெற்ற 5 படங்கள்

ஒரு காலகட்டத்தில் முன்னணி நடிகர், நடிகை ஆக இருந்தவர் தான் பிரபு, குஷ்பூ. இவர்களது ஜோடி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. பிரபு, குஷ்பூ இவர்களுடைய கெமிஸ்ட்ரி மிகுந்த வரவேற்ப்பை பெற்றது.

தர்மத்தின் தலைவன்: 1988இல் எஸ்பி முத்துராமன் இயக்கத்தில் வெளியான தர்மத்தின் தலைவன் திரைப்படத்தில் ரஜினியும், பிரபுவும் அண்ணன் தம்பியாக நடித்திருப்பார்கள். இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக சுஹாசினியும், பிரபுவுக்கு ஜோடியாகும் குஷ்புவும் நடித்திருந்தார்கள். இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.

சின்னதம்பி: பி வாசுவின் இயக்கத்தில் 1991இல் வெளியான திரைப்படம் சின்னத்தம்பி. இத்திரைப்படத்தில் பிரபு, குஷ்பு, கவுண்டமணி, மனோரமா, ராதாரவி என பலரும் நடித்திருந்தனர். இப்படம் அண்ணன் தங்கை பாசத்தை உணர்த்துவதாக இருந்தது. மிகப்பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம்.

கிழக்குக்கரை: 1991 இல் பி வாசு இயக்கத்தில் தேவா இசையமைத்து வெளியான திரைப்படம் கிழக்குக்கரை. இப்படத்தில் பிரபு மற்றும் குஷ்பு முக்கிய வேடத்தில் நடித்து இருப்பார்கள். சந்திரசேகர், கவுண்டமணி, விஜயகுமார், ஸ்ரீவித்யா, வெண்ணிறாடை மூர்த்தி என பலரும் நடித்திருந்தார்கள்.

சின்ன வாத்தியார்: 1995ஆம் ஆண்டு சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் சின்ன வாத்தியார். இத்திரைப்படத்தின் பிரபு இரட்டை வேடங்களில் நடித்திருப்பார். குஷ்பு, ரஞ்சிதா, நிழல்கள் ரவி, கவுண்டமணி, செந்தில் ஆகியோர் நடித்திருந்தார்கள். இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.

வெற்றி விழா: 1989ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் வெற்றி விழா. இத்திரைப்படத்தின் இயக்குனர் பிரதாப் போத்தன். கமல்ஹாசன், பிரபு, அமலா, குஷ்பூ, சௌகார் ஜானகி மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். இப்படம் 2017இல் டிஜிட்டல் வடிவில் மீண்டும் வெளியானது.