80-களில் கொடிகட்டி பறந்த நடிகையுடன் மோதும் லிவிங்ஸ்டனின் மகள்.. சன் டிவியின் புதிய சீரியல்

சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு தனி ரசிகர் கூட்டமே உண்டு. பல மறக்க முடியாத சீரியல்களை ஒளி பரப்பிய பெருமை சன் டிவிக்கு உண்டு. அந்த வகையில் இப்போது முக்கிய நட்சத்திரங்களைக் கொண்டு அருவி எனும் புதிய மெகா தொடரை சன்டிவி ஒளிபரப்ப இருக்கிறது.

மூத்த நடிகையான அம்பிகா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவருடன் நடிகர் லிவிங்ஸ்டன் அவர்களின் மகளான ஜோவிதா மற்றும் பல நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.

இவர் ஏற்கனவே சன் டிவியில் ஒளிபரப்பான பூவே உனக்காக சீரியலில் கீர்த்தி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களுக்கு அறிமுகமானவர். சில காரணங்களால் அத்தொடரை விட்டு விலகிய ஜோவிதா தற்போது அருவி தொடரின் மூலம் மீண்டும் நடிக்க வந்திருக்கிறார்.

இந்த சீரியலின் ப்ரோமோ சன் டிவியில் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ப்ரோமோவை பார்க்கும்போது எதிரும் புதிருமாக இருக்கும் மாமியார் – மருமகள் கதை போல் தெரிகிறது. விரைவில் ஒளிபரப்பாக இருக்கும் அருவி தொடரை காண ரசிகர்கள் இப்போதே ஆர்வமாக இருக்கிறார்கள்.

ஏற்கனவே பூவே உனக்காக சீரியலின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த ஜோவிதா அருவி தொடரில் முதன்மை கதாபாத்திரம் ஏற்று நடிப்பதால் இந்த சீரியலுக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.