80-களில் கொடிகட்டிப் பறந்த நடிகர் சுரேஷ்.. தகாத பழக்கத்தால் கெரியரை தொலைத்த சம்பவம்

தமிழ் சினிமாவில் காதல் மன்னனாக வலம் வந்த நடிகர் என்றால் அது நடிகர் ஜெமினி கணேசன் தான். இவரை தொடர்ந்து கமல், அரவிந்த் சாமி உள்ளிட்ட நடிகர்களும் அந்த பட்டியலில் உள்ளனர். ஆனால் இவர்களைவிட முக்கியமான ஒரு நடிகர் உள்ளாராம். பெண்கள் விஷயத்தில் அவரை அடித்து கொள்ள ஆளே கிடையாதாம்.

அப்படி எந்த ஹீரோ என்று தானே கேட்கிறீர்கள். 80களில் தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்த நடிகர் சுரேஷ் தான் அந்த காதல் மன்னன். இவரை அவ்வளவு எளிதில் நம்மால் மறக்க முடியாது. ஏனெனில் அந்த அளவிற்கு தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

பன்னீர் புஷ்பங்கள் படம் மூலம் அறிமுகமான நடிகர் சுரேஷ், அம்மன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். தொடர்ந்து தமிழ், தெலுங்கு மலையாளம் மற்றும் கன்னடம் என சுமார் 250க்கும் மேற்பட்ட படங்களில் சுரேஷ் நடித்துள்ளார். இதுதவிர ரியாலிட்டி ஷோக்கள் ஜட்ஜாகவும், சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ளார்.

மிகவும் வசதியான குடும்பத்தை சேர்ந்த சுரேஷ் சினிமா துறையை பொருத்தவரை பிளே பாயாகவே வாழ்ந்துள்ளார். பல நடிகைகளுடன் நெருக்கம் காட்டிய சுரேஷ் பெண் சகவாசத்தால் அவர் கெரியரையே இழந்து விட்டார் என்றால் நம்ப முடிகிறதா? ஆனால் உண்மை அதுதான்.

பிரபல நடிகராக வலம் வந்த சுரேஷ் சக நடிகையான அனிதா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் என்ன காரணம் என்பது தெரியவில்லை திருமணமான ஒரு வருடத்திலேயே அனிதா விவாகரத்து செய்துவிட்டார் சுரேஷ். இதுதவிர ஏகப்பட்ட பெண்கள் சகவாசம் இருந்ததால், விவாகரத்திற்கு பின்னர் நடிகர் சுரேஷிற்கு பட வாய்ப்புகள் கிடைக்கவே இல்லை.

தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகராக வலம் வந்த சுரேஷ் படங்களில் நடிப்பதில் மட்டும் கவனம் செலுத்தி இருந்தால், தற்போது ரஜினி கமல் போன்று அவரும் ஒரு உச்ச நடிகராக வளர்ந்திருப்பார். ஆனால், சுரேஷ் குடி மற்றும் பெண்கள் என கூத்தடித்து வந்ததால், கெரியரை இழந்து தற்போது பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்து வருகிறாராம்.

பிக்பாஸ் ஜுலியவே மிஞ்சும் சர்வைவர் போட்டியாளர்.. வாய்ச்சவடாலால் தெரியவரும் உண்மை முகம்.!

தற்போதெல்லாம் சேனல்களில் பலவிதமான ரியாலிட்டி ஷோக்களை மக்கள் கண்டு ரசித்து வருகின்றனர். அதேபோல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் வரும் சர்வைவர் என்ற நிகழ்ச்சி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த ...
AllEscort