80களில் கொடிகட்டிப் பறந்த நடிகை.. தற்போது எப்படி இருக்கிறார் தெரியுமா?

தமிழ் சினிமாவில் 70, 80களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் ஒய் விஜயா. இவர் ஆந்திரா மாநிலத்தில் கர்ணுலில் 1957 இல் பிறந்தார். இவருடைய தந்தை எனிகந்த்லா ஜானியானியா கூட்டுறவு வங்கியில் மேலாளராக பணி புரிந்தவர்.

ஒய் விஜயா நகைச்சுவை, குணச்சித்திரம், வில்லி என பலதரப்பட்ட கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். நடிகை விஜயாவுக்கு நடனத்தின் மீது மிகுந்த ஆர்வம் உண்டு. அதனால் விஜயா கிளாசிக் நடன மங்கையாக விளங்கினார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் பல மொழிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

கிளிஞ்சல்கள், ராஜாதி ராஜா, தில்லு முல்லு, மங்காத்தா சபதம், எங்க ஊரு பாட்டுக்காரன், நூறாவது நாள் என பல வெற்றி படங்களில் ஒய் விஜயா நடித்துள்ளார். இவர் தமிழ் சினிமாவில் கடைசியாக பிரியமான தோழி படத்தில் ஜோதிகாவின் அம்மாவாக நடித்திருந்தார். விஜயா எம்ஜிஆர், சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், கமலஹாசன் ஆகிய முன்னணி நடிகர்களுடன்
நடித்துள்ளார்.

தெலுங்கு சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வந்த என் டி ராமாராவ் உடன் ஸ்ரீ கிருஷ்ணா சத்யா என்ற படத்தில் கதாநாயகியாக விஜயா நடித்திருந்தார். இவர் தேர்வு செய்யும் படங்கள் அனைத்துமே தமிழ் சினிமாவில் முக்கியத்துவம் வாய்ந்த படங்களாக இருக்கும்.

ஒய் விஜயா 1985 இல் அமலநாதன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அமலநாதன் கல்லூரியில் மேலாளராக பணியாற்றி வருகிறார். அதுமட்டுமின்றி தனியாக தொழில் செய்து வருகிறார்கள். இவர்களுக்கு அனோஸ்கா என்ற மகள் உள்ளார். சென்னையில் உள்ள மகாபலிபுரத்தில் வசித்து வருகிறார்கள். கடந்த 2013ல் அனோஷ்காவுக்கு திருமணம் நடந்தது.

வைபவ் நடித்து ஹிட்டான 5 படங்கள்.. தனியா நின்னா மனுஷன் ஜெயிக்க முடியாது போல

தெலுங்கு திரைப்பட இயக்குனர் ஏ கோதண்டராமி ரெட்டியின் மகன் நடிகர் வைபவ் ரெட்டி. கோதண்டராம இயக்கத்தில் 2007 இல் வெளியான கோதவா என்ற திரைப்படத்தில் அறிமுகமானார் வைபவ். அதன்பிறகு தமிழ்த் திரைப்படங்கள் மற்றும் விளம்பரங்களில் ...