8 வருஷத்துக்கு முன்னாடி எழுதுன கதையை எடுத்துட்டு வாங்க.. உத்தரவிட்ட விக்ரம்

தமிழ் சினிமாவில் அவ்வப்போது வெற்றிப் படங்களையும் நிறைய தோல்விப் படங்களையும் கொடுத்துக் கொண்டிருந்த நடிகர்களின் மிக முக்கியமானவராக இருந்தவர் விக்ரம். ஒரு சில நடிகர்கள் உயிரை கொடுத்து உழைத்தாலும் அதற்கு சரியான அங்கீகாரம் கிடைத்ததா என்றால் சந்தேகம்தான். அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான் சியான் விக்ரம்.

கடந்த சில வருடங்களாகவே ஒரு நியாயமான வெற்றிக்கு போராடிக் கொண்டிருந்த அவருக்கு சமீபத்தில் வெளியான மகான் திரைப்படம் ஒரு நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் விக்ரம் இருவரும் இணைந்து நடித்த இந்தப் படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கி இருந்தார்.

இந்த படம் வெற்றியைக் கொடுத்த நிலையில் அடுத்தடுத்து தொடர் வெற்றி படங்களை கொடுப்பதில் ஆர்வமாக இருக்கும் விக்ரம் அடுத்ததாக பா ரஞ்சித் படத்தில் நடிக்க உள்ளார். தற்போது பா ரஞ்சித் நட்சத்திரம் நகர்கிறது என்ற படத்தை எடுத்து வருகிறார். இந்த படத்தை முடித்த பிறகு விக்ரம் படத்தை இயக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதற்கு காரணம் விக்ரம் தானாகவே ரஞ்சித்துக்கு போன் செய்து தனக்காக ஒரு படம் செய்யுமாறு கேட்டதாகவும் அப்போதுதான் 8 வருடத்திற்கு முன்னால் உங்களிடம் ஒரு கதை சொன்னேன் ஞாபகம் இருக்கிறதா என பழைய கதையை தட்டியதாகவும் தெரிகிறது.

இந்த கதையை கார்த்தியின் மெட்ராஸ் படத்தை இயக்குவதற்கு முன்பே விக்ரமிடம் சொல்லி இருந்தாராம் பா ரஞ்சித். ஆனால் அதன்பிறகு கபாலி, காலா என ரஜினி படங்களில் வாய்ப்புகள் கிடைக்க கிட்டத்தட்ட எட்டு வருடங்கள் கடந்து விட்டன. காலம் கடந்தாலும் அது விக்ரமின் கைக்கு தான் வந்து சேர வேண்டும் என்று எழுதி இருக்கிறது போல.

விக்ரமும் தற்போது தொடர்ந்து வெற்றிப் படங்கள் கொடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு உள்ளார். அதற்கு காரணம் அவரது மகன் துருவ் விக்ரம் நடிக்கும் படங்கள் தொடர் வெற்றியைப் பெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் மகன்தான் சினிமாவுக்கு வந்து விட்டாரே நீங்கள் ஓரம்கட்டி விட வேண்டியதுதானே என யாரும் சொல்லிவிடக் கூடாது அல்லவா.