750 படங்கள் நடித்த பிரபல காமடியன்.. மருத்துவ செலவுக்கு கூட கையேந்தும் நிலைமை

தமிழ் சினிமாவில் பல படங்களில் குணச்சித்திர நடிகராக நடித்தவர் குண்டு கல்யாண். இவர் எம்ஜிஆர் காலத்திலிருந்தே பல படங்கள் நடித்து வருகிறார். இவர் எம்ஜிஆரின் தீவிர விசுவாசி எம்ஜிஆர் அதிமுக கட்சி தொடங்குவதற்கு முன்பே அவருடன் நெருக்கமான நண்பர் ஆனார். இவர் கிட்டத்தட்ட 750 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.

இவர் தந்தை குண்டு கருப்பையாவும் அதிமுக தொண்டர். அது மட்டுமில்லாமல் தனது குடும்பத்தில் இருக்கும் அனைவருமே அதிமுகவின் தீவிர தொண்டர்கள் என குண்டுகல்யாணம் சமீபத்தில் தெரிவித்திருந்தார். கிட்டத்தட்ட50 ஆண்டுகளாக அதிமுகவின் தலைமைக் கழக பேச்சாளராக இருந்துள்ளார்.

கடந்த 2 ஆண்டுகளாக தனக்கு சிறுநீரக பிரச்சினை இருப்பதாக கூறியுள்ளார். தற்போது மருத்துவமனையில் வாரங்களுக்கு ஒரு முறை டயாலிசிஸ் செய்து வருவதாக கூறியுள்ளார். அதற்கு அதிகமான செலவு ஏற்படுவதாகவும் டயாலிஸ் செய்தால் உடல் தேறிவிடும் ஆனால் அதற்கு பெரிய அளவில் பணம் தேவைப்படும் அந்த அளவிற்கு தன்னிடம் பணம் இல்லை எனக் கூறியுள்ளார்.

மேலும் இதனை பற்றி அதிமுக நிர்வாகிகளிடம் குண்டு கல்யாண் பலமுறை கூறியுள்ளார்.ஆனால் யாரும் அதை பற்றி கண்டுகொள்ளவில்லை மேலும் குண்டு கல்யாண் உதவுவதற்கு யாரும் முன்வரவில்லை. ஆனால் ஓபி பன்னீர்செல்வம் அவர்கள் கட்சியின் முக்கிய நிர்வாகத்தில் இருந்த போது குண்டு கல்யாணம் மருத்துவ செலவுக்கு ஒரு சில உதவிகளை செய்துள்ளார்.

அதன்பிறகு அதிமுக கட்சி நிர்வாகிகள் யாரும் குண்டு கல்யாண் கண்டுகொள்ளவில்லை மேலும் ஜெயலலிதா அவர்கள் இருந்திருந்தால் கண்டிப்பாக தனது மருத்துவ செலவுக்கு உதவி செய்திருப்பார்கள். மேலும் பன்னீர்செல்வம் அவர்கள் முக்கிய பதவியில் இருந்தாலும் உதவி செய்திருப்பார்கள்.

ஆனால் தற்போது இருக்கும் அதிமுக முக்கிய நிர்வாகிகள் கண்டுகொள்ளவில்லை என வருத்தத்துடன் தெரிவித்துள்ளார். மருத்துவ உதவிக்காக கையேந்தும் நிலையில்  உள்ளார் என்று நடிகர் சங்கம் தனது டுவிட்டரில் ஒரு பதிவை வெளியிட்டு உள்ளது.

உச்சக்கட்ட சந்தோசத்தில் கண்ணம்மா.. பாரதியால் கதறி கூப்பாடு போடும் வெண்பா!

விஜய் டிவியின் பாரதிகண்ணம்மா சீரியலில் எப்படியாவது பாரதியை திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்ற நோக்கத்தில் கண்ணம்மாவிடமிருந்து ஒன்பது வருடங்களாக பாரதியை பிரித்து வைத்தாலும் வெண்பாவால் பாரதியை திருமணம் செய்து கொள்ள முடியவில்லை. இதனால் வெண்பாவின் ...