73 வயது நடிகையை தேடிபோய் வாய்ப்பு கொடுத்த பாலா.. சூர்யாவுக்கு ஜோடி போட்ட காரணம் இதுதான்

நடிகர் சூர்யா தற்போது இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. கிட்டத்தட்ட அனைத்து பணிகளும் முடிவடைந்து விட்ட நிலையில், எதற்கும் துணிந்தவன் படம் அடுத்தாண்டு பிப்ரவரி 4 ஆம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

இந்நிலையில் இப்படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா ஒரே சமயத்தில் பாலா மற்றும் சிறுத்தை சிவா இயக்கும் படங்களில் நடிக்க உள்ளாராம். இதில் பாலா இயக்கும் படத்தை சூர்யா மற்றும் ஜோதிகாவின் தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரிக்க உள்ளது. தற்போது இப்படத்தின் ப்ரீ ப்ரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளாராம். இவர் ஏற்கனவே தானா சேர்ந்த கூட்டம் படத்தில் சூர்யாவுடன் இணைந்து நடித்திருந்த நிலையில், தற்போது இரண்டாவது முறையாக சூர்யாவுடன் கீர்த்தி சுரேஷ் ஜோடி சேர உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுதவிர படத்தில் மற்றுமொரு முக்கிய கதாபாத்திரத்தில் 70களில் பிரபல நடிகையாக வலம் வந்த நடிகை ஹேமமாலினி நடிக்க உள்ளாராம். ஒருவேளை படத்தில் சூர்யா அப்பா மகன் என இரண்டு கேரக்டரில் நடிக்கலாம். அதில் ஹேமமாலினி அப்பா கேரக்டருக்கு ஜோடி நடிக்க வாய்ப்பு இருக்கலாம் என கூறப்படுகிறது.

இந்நிலையில் பாலா ஏன் ஹேமமாலினியை தேர்வு செய்தார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. படத்தில் இந்த கதாபாத்திரம் மிகவும் வலுவான பெண் கதாபாத்திரமாம். இதில் ஹேமமாலினி தான் பொருத்தமாக இருப்பார் என பாலா நினைத்தாராம். அதனால் தான் இந்த கேரக்டரில் நடிக்க அவரை அணுகியுள்ளார். தற்போது பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது.

நடிகை ஹேமமாலினி இறுதியாக ஹே ராம் படத்திற்கு பின்னர் தமிழ் சினிமாவில் நடிக்கவே இல்லை. தற்போது பல ஆண்டுகள் கடந்து பாலா படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்தாண்டு தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

ரஜினிக்கு தலைவி படத்தை போட்டு காமித்த ஏஎல் விஜய்.. பார்த்த பின் என்ன சொன்னார் தெரியுமா.?

முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்கப்பட்டு தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது தலைவி திரைப்படம். இயக்குனர் விஜய் அவர்களின் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாக்கியது தலைவி திரைப்படம். ஜெயலலிதாவாக கங்கனா ரனாவத், ...