கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தில் பாலிமர் தொலைக்காட்சி இருந்தது. காரணம் இதில் ஹிந்தி சீரியல்களைப் தமிழில் டப்பிங் செய்து ஒளிபரப்பப்பட்டு வந்ததே. இதற்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அதிகம் வரவேற்பு கொடுத்தனர்.

மக்களும் பெரிய ஆதரவளித்து வந்தனர். சில ஆண்டுகளாக பாலிமர் தொலைக்காட்சி டப்பிங் சீரியல்களை ஒளிபரப்பு செய்வதை நிறுத்திவிட்டது. அதே சமயம் தமிழ் சீரியல்களும் பெருகி மக்களின் கவனத்தை தன் பால் ஈர்த்தது.

ஆயினும் மக்களிடம் ஹிந்தி சீரியல்களுக்கு இருந்த வரவேற்பு இன்னும் குறையவில்லை என்பதை உணர்ந்து, மீண்டும் பாலிமர் தொலைக்காட்சி ஏற்கனவே ஒளிபரப்பான சூப்பர் ஹிட் சீரியலின் இரண்டாம் பாகத்தை ஒளிபரப்பு செய்ய தயாராகி வருகிறது.

2014 ஆம் ஆண்டுகளில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி ரசிகர்களை அதிகம் உருவாக்கிக்கொண்ட சீரியல்தான் ‘உள்ளம் கொள்ளை போகுதடா’ சீரியல். இந்த சீரியல் ஒரு அழகிய தம்பதிகளின் காதல் கதையையும் அவர்களின் செல்ல சண்டைகளையும் அழகாக மிக அற்புதமாக ரசிகர்களை கவர்ந்தது.

இதில் கதாநாயகன் ராம் மற்றும் கதாநாயகி பிரியா அவர்களின் வாழ்க்கை, மோதலில் ஆரம்பித்து காதலில் முடிந்த ஒரு சூப்பர் ஹிட் காதல் சீரியலாக இருந்து வந்தது. தற்பொழுது இந்த சீரியலின் இரண்டாம் பாகம் விரைவில் பாலிமர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட உள்ளது.

மீண்டும் ராம், பிரியாவின் காதல் கதையை புதிய முகங்களை கொண்டு தயாரித்து வருகின்றனர். இதன் தமிழ் டப்பிங் நாளை முதல் இரவு 8.30 மணிக்கு பாலிமர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுக்க உள்ளது. மீண்டும் மக்களின் மனங்களைக் கொள்ளை கொள்ளுமா இந்த சீரியல்.