6 நாளில் பல கோடி செலவு செய்த தளபதியின் 66.. பீஸ்ட் மூலம் பயத்தை காட்டிய நெல்சன்

மாஸ்டர் படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து நெல்சன் திலீப்குமார் இயக்கிய பீஸ்ட் திரைப்படமானது உலகெங்கும் இன்று ரிலீஸ் ஆகி திரையரங்கில் அதிக எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. இந்த நேரத்தில் சைலன்டாக விஜய்யின் அடுத்த படம் ஷூட்டிங் ஆரம்பித்து விட்டது.

அதாவது தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபைலி இயக்கத்தில் தளபதி விஜயின் 66-வது படத்தின் வேலைகள் படு ஜோராக நடந்து வருகிறது. இந்நிலையில் போக்கிரி படத்துக்கு போடப்பட்ட செட் போல் இந்த படத்திற்கும் ஒரு பிரம்மாண்ட செட் ஒன்று போடப்பட்டு சூட்டிங் துவங்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் விஜய்யுடன் ராஷ்மிகா மந்தனா ஜோடியாக நடிக்கப் போகிறார். இதில் சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். எனவே இந்தப் படத்திற்கான படப்பிடிப்பு சென்னையில் துவங்கப்பட்டுள்ள நிலையில் சென்னை ஈசிஆர் சாலையில் உள்ள ஒரு ஸ்டுடியோவில் பிரமாண்ட செட் போடப்படும் பணிகள் துவங்கப்பட்டு உள்ளது.

இந்த செட்டில் தான் விஜய் 66-வது படத்தின் பெரும்பாலான படப்பிடிப்புகள் காட்சிப்படுத்தப்பட உள்ளது. இதில் முதல் முதலாக ஒரு பாட்டு காட்சிகள் எடுத்து வருகின்றனர். 6 வெளி நாட்டு அழகிகள் இதற்காக இந்தியா வந்து இருக்கின்றனர். அவர்களுடன் விஜய் ஒரு செமையான டான்ஸ் பர்பாமன்ஸ் கொடுத்திருக்கிறார்.

இதில் ஆச்சரியம் என்னவென்றால் இந்த பாட்டிருக்கு ஆரம்பத்திலேயே நாலரை கோடிகள் செலவு. இதுவரை எந்த ஒரு விஜய் படத்திற்கும் இப்படி ஒரு செலவு செய்ததில்லையாம். 6 நாளில் நாலரை கோடிகள் என்றால் படத்தின் பட்ஜெட் எவ்வளவு.

இதையெல்லாம் இந்தப் படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜ், தளபதி விஜய்யை நம்பி அசால்டாக சமாளிக்க தயாராகியுள்ளார். மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு வருகிற ஆகஸ்ட் மாதத்திற்குள் நடத்தி முடித்து தீபாவளிக்கு படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு எடுத்திருக்கிறது. பீஸ்ட் படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாததால் தயாரிப்பாளருக்கு நெல்சன் மூலம் ஒரு பயம் வந்துள்ளதாம்.