6 நாட்களில் ரூ.2 கோடி பட்ஜெட்டில் உருவாகும் கார்த்தி படம்.. இந்த படம் ஆரம்பிச்சு பல நாள் ஆச்சு.!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் கார்த்தி. இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் சமீபகாலமாக நல்ல வரவேற்பு பெற்று வருகின்றன. அதனால் தற்போது தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.

கார்த்தி பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில் சர்தார் எனும் படத்தில் நடித்து வருகிறார். இப்படம் பல மாதங்கள் முன்பே படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்டு தற்போது வரை முடியாமல் தொடர்ந்து கிடைக்கும் நேரங்களில் படத்தை எடுத்து வருகின்றனர்.

ஏற்கனவே கார்த்தி சர்தார் படத்தின் தயாரிப்பாளருக்கு ஒரு சில பொருளாதார பிரச்சனையில் சிக்கியதாக தகவல்கள் வெளியாகியது. அதாவது படத்தை குறுகிய மாதத்திலேயே முடித்துவிடலாம் என கூறிவிட்டு தற்போது வரை படப்பிடிப்பு நடந்து வருவதால் தயாரிப்பாளர் தொடர்ந்து பைனான்ஸ்வர்களுக்கு உதவி கேட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியது.

ஆனால் கார்த்திக் அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் முத்தையா உடன் இணைந்து விருமன் படத்தில் நடிப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்தனர். அதற்கு ஒரு சிலர் ஷங்கர் மகள் அதிதி ஷங்கர் நடிப்பதால் தான் கார்த்திக் இப்படத்தினை முதலில் வெளியிடலாம் என திட்டமிட்டு நடித்து வருவதாக கூறி வருகின்றனர்.

ஆனால் சர்தார் படத்தின் தயாரிப்பாளர் முதலில் தனது படத்தை முடித்து விடலாம் என கூறியுள்ளார். மேலும் 6 நாட்கள் தொடர்ந்து கார்த்திக் நடிக்கவிருப்பதாகவும் இதற்காக தற்போது தயாரிப்பாளர் 2 கோடி அளவில் செட் போட்டு படப்பிடிப்பு நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அஜித் விஜய்யை பின்னுக்கு தள்ளிய ராம்சரண்.. ஷங்கர் பட சம்பளம் இத்தனை கோடிகளா?

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ராம்சரண். இவர் ராஜமௌலி இயக்கத்தில் உருவாகியுள்ள ஆர்ஆர்ஆர் திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வெளியாகவுள்ளது. இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ...