6 ஆடி ஸ்லிம்மான பாலிவுட் ஹீரோயினை புக் செய்த விஜய்.. தளபதி 66 குத்தாட்டத்திற்கு பஞ்சமிருக்காது

பீஸ்ட் படத்தை அடுத்து இயக்குனர் வம்சி பைடிபைலிஉடன் கைகோர்த்துள்ளார் நடிகர் விஜய். பீஸ்ட் படம் ஏப்ரல் 13ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் அடுத்த திரைப்படமான தளபதி 66 திரைப்படத்தின் அப்டேட்டுக்கு ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.

தமிழ் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வெளியாக உள்ள தளபதி 66 படத்திற்கு இசையமைப்பாளர் டி. இமான் இசை அமைக்கிறார். இந்த நிலையில் தளபதி 66 படத்திற்கான கதாநாயகிகள் தேர்விற்காக பல மொழி கதாநாயகிகளுடன் பேச்சு வார்த்தை நடைபெற்றது.

முக்கியமாக நடிகை கீர்த்தி சுரேஷ், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோருடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால் இப்போது பரம சுந்தரியாக
நம் எல்லோருக்கும் அறிமுகமாகிய பாலிவுட் நடிகை கீர்த்தி சனோன் இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக முதல் முறையாக நடிக்க இருக்கிறார்.

ஏ.ஆர்‌.ரஹ்மான் இசையில் வெளிவந்த மிமி திரைப்படத்தில் இடம்பெற்ற பரம சுந்தரி பாடலில் நடனமாடி இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்தவர் கீர்த்தி சனோன். மெலிந்த உடல் தோற்றத்திலும் 6 அடி உயரத்தில் இருக்கும் கீர்த்தி சனோன் நடனத்தில் கைத்தேர்ந்தவர்.

அதனால் விஜய்யுடன் இவர் கைகோர்த்தால் விஜய்யும் கீர்த்தி சனோன் நடனத்தையும், நடிப்பையும் பார்க்க தற்போது ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். பாலிவுட்டில் தில்வாலே ஹவுஸ்புல் உள்ளிட்ட திரைப்படத்தில் நடித்த உள்ளார் கீர்த்தி சனோன், தற்போது தளபதி 66 திரைப்படம் மூலமாக தமிழில் அறிமுகம் ஆகிறார்.

13ம் தேதி பீஸ்ட் படம் வெளிவர உள்ள சூழ்நிலையில் தளபதியின் அடுத்த படத்தின் அப்டேட் ரசிகர்களுக்கு பெரும் உற்சாகத்தை உள்ளது. பீஸ்ட் படத்தின் விளம்பர பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. பிரம்மாண்டமான கே ஜி எஃப் – 2 படத்துடன் மோதுவதால் நெல்சனுக்கு சற்று பயம் இருக்கத்தான் செய்கிறதாம்.