51 வயதிலும் அஜித் பட நடிகையை துரத்தும் பிரபல நடிகர்.. அவ்ளோ வெறி மாப்பிளைக்கு!

இந்திய சினிமாவின் பிரபல நடிகையாக வலம் வருபவர் தபு. தற்போது 50 வயதை கடந்த நிலையில் இன்னமும் திருமணம் செய்து கொள்ளாமல் சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார். மேலும் இந்த வயதிலும் படுக்கையறை ரொமான்ஸ் காட்சிகளில் நடித்து பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.

தபு தமிழில் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். தபுவுக்கு தமிழில் மட்டுமல்லாமல் தென்னிந்திய சினிமாவிலும் ஒரு நல்ல வரவேற்பு கிடைத்து பின் ஹிந்தி சினிமாவுக்கு சென்று அங்கே முன்னணி நடிகையாக கொடி நாட்டினார்.

வழக்கம்போல் முன்னணி நடிகையான பிறகு பிரபல நடிகரின் மீது காதல் ஏற்பட்டது. அவர் வேறு யாரும் இல்லை நம்ம பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் தான். இருவருக்குள்ளும் அப்படி ஒரு காதல் இருந்தது என்பதை சொல்லி விவரிக்க வார்த்தை இல்லை.

அப்படி இருவரும் நெருக்கமாகவும் ஒரு கட்டத்தில் வாழ்ந்து வந்தனர். ஆனால் அதன் பிறகு இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டனர். பின்னர் அஜய் தேவ்கன் கஜோல் என்ற நடிகையை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

ஆனால் அஜய் தேவ்கன் பிரிந்த பிறகு தபு தற்போது வரை திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வருகிறார். இப்போதும் அஜய் தேவ்கன் தபுவுக்கு தொந்தரவு கொடுப்பதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அப்படி ஒரு முறை காதல் முறிவுக்கு பிறகு திருமணம் செய்து கொள்ளலாம் என ஒரு நபருடன் பழகி வந்தாராம் தபு.

ஆனால் அந்த நபரை தபு வாழ்க்கையில் இனி நீ குறுக்கே வரக்கூடாது என எச்சரித்து விரட்டி அடித்து விட்டாராம். அன்றிலிருந்து இன்றுவரை தபு உடன் யார் நெருங்கி பழகினாலும் அவர்களை யாருக்கும் தெரியாமல் மிரட்டி வழியில் வராமல் செய்து விடுவாராம் அஜய் தேவ்கன். இந்த தகவலை தபு சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில் பகிர்ந்து கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.