50 வயதிற்கு மேல் பிரபலமாக வேண்டுமா.? ரசிகர் கேட்ட கேள்விக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரபல நடிகை

தமிழ் சினிமாவிற்கு கங்கை அமரன் இயக்கத்தில் வெளிவந்த ‘கரகாட்டகாரன்’ என்னும் படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் நடிகை கனகா. அதைத்தொடர்ந்து பெரிய வீட்டு பணக்காரன், அதிசயபிறவி, சாமுண்டி, பெரிய குடும்பம், விரலுக்கேத்த வீக்கம் போன்ற திரைப்படங்களிலும் நடித்து பிரபலமானார்.தமிழ் திரையுலகில் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் மலையாள திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார்.

நடிகை கனகா பழம்பெரும் நடிகை தேவிகாவின் மகள், அதுமட்டுமின்றி இவர் தெலுங்கு சினிமா தயாரிப்பாளர் ரகுபதி வெங்கைய நாயுடு உடைய பேரப்பிள்ளை ஆவார். நீண்ட வருடங்களாக சினிமாவில் இருந்து விலகி இருந்த நடிகை கனகா தற்போது சினிமாவில் நடிக்கும் ஆசை வந்திருப்பதாகவும், வாய்ப்பு கிடைத்தால் நடிப்பேன் என்று விருப்பம் தெரிவித்துள்ளார்.

இவர் கலிபோர்னியாவை சேர்ந்த முத்துக்குமார் என்பவரை 2007 ஆம் ஆண்டு ரகசிய திருமணம் செய்து கொண்டார். அதன்பிறகு கருத்து வேறுபாட்டின் காரணமாக அவரை விட்டுப் பிரிந்து தனது வாழ்க்கையை தானாகவே அமைக்க தொடங்கிவிட்டார்..

தற்போது நடிகை கனகாவிற்கு நீண்ட வருடங்கள் கழித்து, சினிமாவில் நடிப்பதற்கான ஆசை வந்திருப்பதாகவும் தான் இதுவரை சினிமாவில் எதுவும் கற்கவில்லை என்றும் இனிமேலாவது, நடிக்க வாய்ப்பு கிடைத்தால் அதை எல்லாம் கற்க வேண்டும் என்று தனது 50 வயதில் தனக்கு இந்த ஆசை வந்திருப்பதாகவும் கூறியுள்ளார். அதே நேரத்தில் நடிகை கனகா பப்ளிசிட்டிகாகவே வேண்டுமென்றே இவ்வாறு கூறி வருகிறார் என்று பலரும் விமர்சித்தனர்.

தற்போது, அந்த விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பதிலளித்த நடிகை கனகா ‘நான் எதையும் பிரபலமாகுவதற்காக செய்யவில்லை.எனக்கு உண்மையிலேயே சினிமாவை பற்றி இன்னும் கற்க வேண்டும் என்ற ஆசை இப்போது வந்திருக்கிறது.

இந்த வயதில் என்னை யாராவது நடிக்க கூப்பிடுவார்களா என்று எனக்கு தெரியவில்லை. ஒருவேளை கூப்பிட்டால் நான் எப்படி நடிக்க வேண்டும், ஆடை அணிவது, மேக்கப் போட்டுக் கொள்வது போன்ற விஷயங்களை எல்லாம் கற்க வேண்டும் என்று நடிகை கனகா குறிப்பிட்டிருந்தார்.