பாலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை தான் கத்ரீனா கைஃப். பாலிவுட்டின் கனவுக்கன்னி என்ற அழைக்கப்படும் கத்ரீனா கைஃப் அமிதாப்பச்சனின் பூம் படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். கத்ரீனா ரேஸ், சிங் இஸ் கிங், பாடிகார்ட், அக்னிபாத், ஏக்தா டைகர், டைகர் ஜிந்தா ஹே என பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

கத்ரீனா படங்களில் ஒரு குத்து பாடலுக்கு மட்டும் நடனமாடி ரசிகர்களை கிறங்கடிப்பார். சமீபத்தில் கத்ரீனா கைஃப், விக்கி கௌசல் இருவரும் காதலிப்பதாக செய்தி கசிந்தது. இதை உறுதி செய்யும் வகையில் அனில் கபூரின் மகன் ஹர்ஷவர்தன் பேட்டி ஒன்றில் கலந்து கொண்டபோது பாலிவுட் காதல் வதந்திகளில் எது உண்மை என பேட்டியாளர் கேட்டார். அதற்கு ஹர்ஷவர்தன் கத்ரீனாவும், விக்கியும் காதலிப்பது உண்மை என்றார்.

கத்ரீனா கைஃப், விக்கி கௌசல் இருவரும் ஒன்றாக தீபாவளி கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தில் வெளியானது. இதனால் இவர்களது காதல் சினிமா வட்டாரம் மற்றும் ரசிகர்களிடையே உறுதியானது. பிரபல பாலிவுட் நடிகர் விக்கி கௌசல் பல படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார்.

இவர்களது திருமணம் எப்போது என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் டிசம்பரில் நடக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கத்ரீனா, விக்கி திருமணம் ஜெய்ப்பூரில் பிரமாண்டமான சவாய் மாதோபூரில் உள்ள சிக்ஸ் சென்ஸ் சொகுசு ஹோட்டலில் டிசம்பர் மாதத்தில் நடக்க உள்ளது.

இருவரும் பாலிவுட் நட்சத்திரங்கள் என்பதால் திருமணத்திற்கு பல பிரபலங்கள் வர வாய்ப்புள்ளது. இதனால் பிரம்மாண்டப் ஹோட்டலை தேர்வு செய்துள்ளார்கள். இவர்களது திருமண செய்தி கேட்ட பாலிவுட் ரசிகர்கள் கத்ரீனாவுக்கு, விக்கிக்கும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.