5 மொழி படத்தில் அதிக சம்பளம் கேட்ட பிரபல நடிகை.. வாய்ப்பை பிடிங்கி கங்கனா ரனவத்துக்கு கொடுத்த படக்குழு!

சினிமா பிரபலங்கள் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி கொண்டு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற உச்ச நட்சத்திரமாக திரையுலகில் வலம் வந்தால், அவர்கள் நடிக்கவிருக்கும் அடுத்தடுத்த திரைப்படத்திற்கு அவர்களின் சம்பளமானது உயர்ந்துகொண்டே போகும். இது நடிகைகளுக்கும் பொருந்தும்.

தற்போது பாகுபலி, தலைவி போன்ற திரைக்கதைகளை எழுதியவர் விஜயேந்திர பிரசாத். இவர் அடுத்ததாக சீதா படத்திற்கு திரைக்கதை எழுத உள்ளார். இந்த படமானது அலாகிக் தேசாய் இயக்கத்தில் வெளிவர உள்ளது. தலைவி திரைப்படத்தில் நடித்த பிரபல ஹிந்தி நடிகை கங்கனா ரனாவத் தற்போது சீதா எனும் திரைப்படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.

இந்தப் படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி போன்ற மொழிகளில் டப்பிங் செய்ய உள்ளனர். நடிகை கங்கனா ரனாவத் தாம்தூம் என்ற திரைப்படத்தில் நடிகர் ஜெயம்ரவியுடன் நடித்து தமிழ் திரையுலகில் பிரபலமானார்.

மணிகர்ணிகா, தலைவி போன்ற பவர்ஃபுல் திரைப்படங்களில் நடித்து பிரபலமடைந்த கங்கனா. அதைப்போல் சீதா படத்திலும் நடிக்கவுள்ள கங்கனா ரனாவத்தின் தனித்துவ நடிப்பு வெளிக்காட்டப்படும்.

இந்த படத்திற்கு முதலில்  நடிக்க நடிகை கரீனா கபூரை கூப்பிட்டதாகவும், அவர் அந்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக ரூபாய் 12 கோடி கேட்டதாகவும் செய்திகள் வெளிவந்தன. அதன் பின்னரே, நடிகை கங்கனா ரனாவத் இந்த திரைப்படத்தில் நடிக்க கமிட்டாகி இருக்கிறார் என்பதை அதிகாரபூர்வமாக தகவலை படக்குழு தெரிவித்துள்ளது.

தற்போது, நடிகை கங்கனாரனாவத் நடிக்க உள்ள சீதா படம் ஒரு வரலாற்று சிறப்பு மிக்க கதையாகும். இந்த திரைக்கதை ராமாயணம் எனும் காவிய தொடரிலிருந்து எடுக்கப்பட்டதாகும்.

இந்த படத்தில் கங்கனா, அன்னை சீதா தேவியாக நடிக்க உள்ளார். இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், சீதா திரைப்படத்தின் டீசர், போஸ்டரை பகிர்ந்துள்ளார். இது அவரது, ரசிகர்களின் மத்தியில் வரவேற்பை பெற்றது அதுமட்டுமின்றி அவரது ரசிகர்களால் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.

நீ எல்லாம் ஒரு மனுஷனா.? அப்பவே மேடையில் கமலஹாசனை தாக்கிய சரத்குமார்

பிரச்சனை வந்தால் ஊரைவிட்டு போகிறேன் என்று சொல்பவர்கள் எல்லாம் மனிதர்களா என கமலஹாசனை நடிகர் சரத்குமார் வெளிப்படையாகவே தாக்கி பேசிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த ஆறு வருடங்களுக்கு முன்பு நடிகர் ...