கடந்த 2007ஆம் ஆண்டு அமீர் இயக்கத்தில் வெளியான பருத்திவீரன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி, அதன் பின் தொடர்ந்து பல படங்களை நடித்துக்கொண்டிருப்பவர் தான் நடிகர் கார்த்தி.

இவருடைய இயல்பான நடிப்பினாலே இவருக்கென்று தனி ரசிகர் கூட்டம் உள்ளது. நடிகர் கார்த்தி தற்போது மூன்று பிரம்மாண்ட படங்களை நடிப்பதில் பிஸியாக உள்ளார். பொன்னியின் செல்வன், சர்தார், விருமன் ஆகிய படங்களில் அதிக கவனம் செலுத்தி நடித்து வருகிறார்.

இந்த நிலையில் சூர்யா தயாரிப்பில் கார்த்தி நடிப்பில் உருவாக இருக்கும் விருமன் படத்தை இயக்குனர் முத்தையா இயக்க உள்ளது அனைவரும் அறிந்ததே. இந்த படத்தில் கதாநாயகியாக, சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் ஷங்கரின்  மகள் அதிதி நடிக்க உள்ளதால் ரசிகர்கள் அதிக ஆர்வத்துடன் இந்தப் படத்தின் அப்டேட்டை எதிர்நோக்கி காத்துள்ளனர்.

இந்த சூழலில் விருமன் படத்தின் படப்பிடிப்பு தற்போது மதுரையில் துவங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விருமன் படத்தைத் தொடர்ந்து சர்தார் படத்தை முடிக்க கார்த்தி திட்டமிட்டுள்ளார்.

அதன் பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் எஸ் ஆர் பிரபு தயாரிப்பில் கைதி படத்தின் இரண்டாவது பாகத்தில் நடிக்கவுள்ளாராம். இது மட்டுமில்லாமல் அருண்ராஜா மற்றும் காமராஜ் இயக்கத்தில் பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் மேலும் ஒரு படங்களில் நடிப்பதற்கு நடிகர் கார்த்தி ஒத்துக்கொண்டுள்ளார்.

இது மட்டுமில்லாமல் ஒரு சில இளம் இயக்குனர்களும் இவரிடம் கதை சொல்வதற்காக விடாமல் தொடர்ந்து துரத்துவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.