45 வயது நடிகைக்கு போட்ட பலே ஸ்கெட்ச்.. ஈ போல் மொய்க்கும் தயாரிப்பாளர்கள்

தமிழ் சினிமாவில் ரசிகர்களின் கனவுக்கன்னியாக ஒரு காலத்தில் திரையுலகையே ஆண்டு வந்தவர் தான் அந்த நடிகை. இவர் விஜய், அஜித், பிரசாந்த் உள்ளிட்ட அனைத்து முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.

எந்த கேரக்டர் கொடுத்தாலும் அதை அப்படியே உள்வாங்கி அந்த கேரக்டராகவே மாறி நடிப்பது சிம்ரனின் தனி சிறப்பு. இப்படி அவர் பலர் கேரக்டர்களை தேர்ந்தெடுத்து நடித்து தன் பெயரை நிலைநாட்டியுள்ளார். அதுமட்டுமல்லாமல் பல ஹீரோயின்கள் நடிக்க தயங்கும் கேரக்டரையும் இவர் அசால்ட்டாக நடித்து விடுவார்.

அந்த வகையில் பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் கேரக்டர் என்றால் பல இயக்குனர்களும் தேர்ந்தெடுப்பது சிம்ரனை மட்டும் தான். அந்த அளவுக்கு தன்னுடைய நடிப்புத் திறமையால் அனைவரையும் கவர்ந்து மற்ற நடிகைகள் அனைவரும் பொறாமை கொள்ளும் அளவுக்கு முன்னணி நடிகையாக திகழ்ந்தார்.

இப்படி புகழின் உச்சியில் இருந்த அவர் திடீரென ஒரு தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார். அதன் பிறகு ஓரிரு திரைப்படங்களில் நடித்த இவர் பேட்டை, மகான் உள்ளிட்ட திரைப்படங்களில் சிறு சிறு கேரக்டர் மற்றும் கெஸ்ட் ரோல் பண்ணினாலும் சினிமாவில் இன்னும் முழுவதுமாக நடிக்க அவர் விரும்பவில்லை.

ஆனாலும் அவருக்கு இப்போதும் கூட அதே ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது. இதைப் பார்த்த பிரபல ஓடிடி நிறுவனங்கள் சிம்ரனை மொய்த்து வருகிறார்கள். ஏனென்றால் இவரை வைத்து கம்மியான பட்ஜெட்டில் குறைந்த நாட்களில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் படங்களை எடுத்து விடலாம் என்பதுதான் அவர்களின் பலத்த திட்டமாக உள்ளது.

சமீபத்தில் இவர் நடித்த பாவ கதைகள் என்ற வெப் சீரிஸ் நெட்ப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. இதன் காரணமாகவே ஓடிடி நிறுவனங்கள் சிம்ரனை வைத்து படம் எடுப்பதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால் இதற்கெல்லாம் சிம்ரன் சம்மதிப்பாரா என்று தான் தெரியவில்லை.