41 வயதில் ரீ-என்ட்ரி கொடுக்கும் விக்ரம் பட நடிகை.. 16 வருடம் கழித்து எடுக்கும் புது அவதாரம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான கார்த்தியின் பல திரைப்படங்கள் வெற்றி படங்களாக அமைந்தவை. இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான தன் முதல் படமான ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் இருந்து தற்போது கைதி திரைப்படம் வரை அனைத்து திரைப்படங்களிலும் வெற்றிகளை தொடர்ந்து கொடுத்து வருகிறார். காமெடி ஆக்ஷன் உள்ளிட்ட கமர்ஷியல் திரைப்படங்களில் நடித்து வரும் இவர் தற்போது முத்தையா இயக்கத்தில் விருமன், வெங்கட்பிரபு இயக்கத்தில் பார்ட்டி,மணிரத்தினம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் உள்ளிட்ட திரைப்படங்களின் வரிசையில் சர்தார் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இத்திரைப்படத்தில் நடிகர் கார்த்தி முதன்முறையாக இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார். இயக்குனர் பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் கிரைம் த்ரில்லர் திரைப்படமாக உருவாகிக்கொண்டிருக்கும் சர்தார் திரைப்படத்த்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கும் இத்திரைப்படத்தை ஜார்ஜ் சி வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தின் இசையை யுவன் சங்கர் ராஜா இசையமைக்க இருந்த நிலையில் கால்ஷீட் காரணமாக தற்போது ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். இந்நிலையில் இந்த படத்தில் நடிகை சிம்ரன் நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார். இந்நிலையில் தற்போது அவர் விலகிக் கொள்வதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே இத்திரைப்படத்தில் நடிகர் தனுஷுடன் கர்ணன் திரைப்படத்தில் இணைந்து நடித்த நடிகை ரஜிஷா விஜயன் மற்றும் விஜய் சேதுபதி,விஷால் ,ஜெயம் ரவி, ஆர்யா உள்ளிட்டோரிடம் ஜோடி சேர்ந்து நடித்த நடிகை ராசி கண்ணா இத்திரைப்படத்தில் மற்றொரு கதாநாயகியாக நடிக்க உள்ளார். தற்போது இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் வெளியான அரண்மனை 3 திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் தோன்றி ரசிகர்களை கவர்ந்தார். இந்தநிலையில் இவர்களோடு நடிகை லைலா நடிக்க உள்ளார்.

சிம்ரனிற்கு பதிலாக நடிகை லைலா இத்திரைப் படத்தில் நடிக்கவிருப்பதாக அதிகாரபூர்வமாக தகவல் வெளியாகியுள்ளது. 1999 ஆம் ஆண்டு விஜயகாந்த் நடிப்பில் வெளியான கள்ளழகர் திரைப்படத்தில் நடிகையாக லைலாஅறிமுகமானார். அதன் பின்னர் அஜித்துடன் தீனா, விக்ரமின் தில், பிரபுதேவாவின் அள்ளித்தந்த வானம் உள்ளிட்ட திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து பிரபலமடைந்தார். முக்கியமாக நடிகர் சூர்யாவுடன் நடித்த மூன்று திரைப்படங்களிலும் அதிக ரசிகர்களை பெற்றார்.

பிதாமகன் ,நந்தா, உன்னை நினைத்து போன்ற திரைப்படங்கள் லைலாவிற்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தது. கனவுக்கன்னியாக வலம் வந்த லைலா 2006ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு திரை உலகில் திரைப்படங்களில் நடிப்பதில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டார். தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு மலையாளம் கன்னடம் உள்ளிட்ட படங்களில் நடித்த லைலா தற்போது 18 ஆண்டுகள் கழித்து படத்தில் கார்த்திக்கு ஜோடியாக சர்தார் திரைப்படத்தில் நடிக்க உள்ளார்.

இத்திரைப்படத்தின் மூலமாக லைலா கம்பேக் கொடுப்பார் என்று திரை வட்டாரத்தில் பலர் தெரிவித்துள்ளனர். மேலும் நடிகை லைலாவின் க்யூட்டான நடிப்பை மீண்டும் காண ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.