40 வயதில் குழந்தை பெற்ற ஊர்வசி.. அச்சு அசல் அம்மாவை போல் இருக்கும் முதல் கணவரின் மகள்.!

கவிதா ரஞ்சனி என்ற தனது பெயரை சினிமாவிற்காக ஊர்வசி என மாற்றிக் கொண்டார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் நடித்துள்ளார். பாக்யராஜின் முந்தானை முடிச்சு திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இவர் நடிகை, தயாரிப்பாளர், டப்பிங் ஆர்டிஸ்ட், தொகுப்பாளர், கதையாசிரியர் என பன்முகத்திறமை கொண்டவர்.

ஊர்வசியின் திரை பயணம் மூன்று முடிச்சு திரைப்படத்தில் தொடங்கி மூக்குத்தி அம்மன் வரை நடித்துள்ளார். தற்போதும் நிறைய படங்களில் நடித்து வருகிறார். சூரரைப்போற்று, மூக்குத்தி அம்மன் படங்கள் வரை நடித்துவிட்டார். அம்மா மற்றும் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஊர்வசியின் வெகுளிதனத்திற்கும், சிரிப்புக்கு ரசிகர்கள் ஏராளம்.

ஊர்வசி பல தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார். சன் டிவியில் ஒளிபரப்பான தங்க வேட்டை என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்தார். இவர் 4 ஃபிலிம்ஃபேர் விருதும் இரண்டு தமிழ்நாடு விருதும் பெற்றுள்ளார்.

ஊர்வசி முதலில் மலையாள நடிகர் மனோஜ் கே ஜெயனை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. சில கருத்து வேறுபாட்டினால் அவரை விவாகரத்து செய்து தனியாக வாழ்ந்து வந்தார். பிறகு, ஊர்வசி 2014ஆம் ஆண்டு 47 வயதில் சிவபிரசாத் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார் அவர் பெயர் இஷாந்த்.

தனுஷை ஓரங்கட்டிய யோகிபாபு.. இந்தியளவில் ஆஸ்கருக்கு தேர்வான ஒரே தமிழ்படம்

வடிவேலு, விவேக், சந்தானம் போன்ற காமெடி நடிகர்களுக்கு பின்னர் தற்போது தமிழ் சினிமாவில் வலம் வரும் ஒரே ஒரு காமெடி நடிகர் என்றால் அது யோகி பாபு மட்டுமே. சோலோவாக காமெடியில் கலக்கி வரும் ...