4 பேரையும் விடாமல் கொக்கி போடும் நெல்சன்.. அட கேரக்டர் பெயரையாவது மாத்துங்க பாஸ்

நெல்சன் திலீப்குமார் தற்போது தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனராக உள்ளார். மிகக்குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகர்களின் படத்தை இயக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. ஆரம்பத்தில் விஜய் டிவியில் வேலை பார்த்த நெல்சன் சிம்புவை வைத்து தனது முதல் படத்தை எடுத்தார்.

கால்ஷீட் மற்றும் பினான்சியல் பிரச்சனை காரணமாக நெல்சனின் முதல்படமான வேட்டை மன்னன் பாதியிலேயே டிராப் ஆனது. அதன் பிறகு அனிருத் மற்றும் லைகா உதவியால் நெல்சன் கோலமாவு கோகிலா படத்தை எடுத்தார். இப்படம் அவருடைய அடுத்தடுத்த படங்களை எடுக்க வித்தாக அமைந்தது.

உதவியை மறக்காத நெல்சன் தன்னுடைய எல்லா படங்களிலுமே அனிருத்தை இசையமைக்க வைத்திருக்கிறார். மேலும் நெல்சன் உடன் ஒரே காலேஜில் படித்தவர்தான் ரெடின் கிங்ஸ்லி. இவரை தன்னுடைய வேட்டை படத்தில் அறிமுகம் செய்திருந்தார் நெல்சன்.

அந்தப் படம் பாதியிலேயே ட்ராப் ஆனதால் இவரைப் பற்றி நமக்கு அப்பவே தெரியவில்லை. மேலும் நெல்சன் தனது அடுத்த படமான கோலமாவு கோகிலா படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு ரெடின் கிங்ஸ்லி அறிமுகம் செய்து வைத்தார். அதன் பிறகு டாக்டர் படத்திலேயும் அவரை நடிக்க வைத்து யோகி பாபுவையே ஓவர் டேக் செய்து இருந்தார் ரெடின் கிங்ஸ்லி. அட இதில் யோகி பாபு ஒன்றும் விதிவிலக்கு கிடையாது. கோலமாவு கோகிலாவில் இருந்து எல்லா படங்களிலும் யோகி பாபுவும் வாய்ப்பு பெற்று வருகிறார்.

அதன்பிறகு ரெடின் கிங்ஸ்லிக்கு அண்ணாத்த, எதற்கும் துணிந்தவன் என முன்னணி நடிகர்களின் படம் வாய்ப்பு கிடைத்தது. மேலும் டாக்டர் படத்தில் நடித்த மகாலி மற்றும் கிளி கேரக்டரை நெல்சன் இன்று வரை விடாமல் அடுத்தடுத்த படங்களுக்கு வாய்ப்பு கொடுத்து வருகிறார்.

கிங்ஸ்லி, மகாலி,யோகி பாபு மற்றும் கிளி இவர்கள் நால்வரையும் விஜய்யின் பீஸ்ட் படத்திலும் நடித்து இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நெல்சன் தனது அடுத்தடுத்த படங்களிலும் இவர்களுக்கு வாய்ப்பு கொடுப்பார் என்பதில் ஆசிரியம் இல்லை.