4 நாட்களுக்கு சக்சஸ் பார்ட்டி வைத்து புகைப்படம் வெளியிட்ட சந்தானம்.. கொல காண்டில் ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் ஒரு சமயத்தில் காமெடியில் கொடிகட்டி பறந்தவர் தான் நடிகர் சந்தானம். காமெடியில் இவரை அடித்துக் கொள்ள ஆளே கிடையாது எனும் அளவிற்கு தனிக்காட்டு ராஜாவாக வலம் வந்து கொண்டிருந்தார். ஆனால் எப்போது இவருக்கு ஹீரோவாகும் ஆசை வந்ததோ அப்போதிலிருந்து இவரது மார்க்கெட் சரிய தொடங்கியது என்று தான் கூற வேண்டும்.

சந்தானத்தை காமெடி நடிகராக ஏற்றுக் கொண்ட ரசிகர்கள் ஏனோ தெரியவில்லை அவரை ஹீரோவாக ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள். இவரது நடிப்பில் வெளிவந்த ஒரு சில படங்களும் சுமாரான வெற்றியையே பெற்றன. தற்போது சந்தானம் மூன்று கெட்டப்புகளில் நடித்து வெளியாகியுள்ள டிக்கிலோனா படம் சமீபத்தில் ஓடிடியில் வெளியானது.

முன்பெல்லாம் திரையரங்கில் வெளியாகி நூறு நாட்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்த படங்களுக்குத்தான் சக்சஸ் மீட், பார்ட்டி என்று கொண்டாடி வந்தார்கள். ஆனால் தற்போது ஓடிடியில் வெளியாகி நான்கு நாட்கள் கூட ஆகாத சந்தானத்தின் டிக்கிலோனா படத்திற்கு சக்சஸ் மீட் கொண்டாடியுள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சந்தானம் நடிப்பில் வெளியான டிக்கிலோனா படத்தை திரையரங்கில் வெளியிட ஆள் கிடைக்காமல் கிடைத்த பணத்துக்கு ஓடிடி தளத்தில் தள்ளிவிட்டனர். அப்படி இருந்தும் படம் மிகவும் சுமார் தான் என்று ரசிகர்கள் கழுவி ஊற்றி வருகின்றனர். ஆனால், படக்குழுவினரோ படம் சக்சஸ் என்று கேக் வெட்டி பார்ட்டி கொண்டாடியிருக்கிறார்கள்.

டிக்கிலோனா படத்தை பார்த்த ரசிகர்களில் பெரும்பாலானோர் சிரிப்பே வரவில்லை என்று தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். ஆனால் சந்தானமோ படம் வெற்றி பெற்று விட்டதாக கூறி கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் எதை வைத்து படம் வெற்றி பெற்றதாக கூறுகிறீர்கள் என சரமாரியாக கேள்வி எழுப்பி வருகிறார்கள்.