39 வயதில் ஹார்லி டேவிட்சன் பைக் ஓட்டும் பிரபல நடிகை.. தல ஹீரோயின்னா சும்மாவா!

2002 ஆம் ஆண்டு வெளிவந்த 5 ஸ்டார் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான நடிகைதான் நடிகை கனிகா. அதன் பிறகு தல அஜித் இரட்டை வேடத்தில் நடித்த வரலாறு திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் மேலும் பிரபலம் அடைந்தார். அதன் பிறகு ஒரு சில படங்களில் நடித்திருந்த கனிகா கடந்த 2008ஆம் ஆண்டு ராதாகிருஷ்ணன் என்பவரை திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் செட்டிலாகிவிட்டார்.

அவருக்கு ஒரு மகன் உள்ளார். சில ஆண்டுகள் சினிமாவில் நடிப்பதை தவிர்த்து கனிகா தற்போது மீண்டும்படங்களில் நடிக்கத் தொடங்கியுள்ளார். கனிகா மலையாளத்தில் இரண்டு படங்களில் கமிட்டாகி நடித்துக்கொண்டிருக்கிறார். அத்துடன் சியான் விக்ரம் நடிப்பில் உருவாகிக்கொண்டிருக்கும் கோப்ரா படத்திலும் இவர் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கனிகா சோஷியல் மீடியாவில் அவ்வபோது தனது புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி கொண்டிருக்கிறார். அந்த வகையில் இவர் தற்போது ஹார்லி டேவிட்சன் பைக் ஓட்டும் வீடியோவை அப்லோட் செய்து தல அஜித்தின் கதாநாயகி என்பதை நிரூபித்துள்ளார்.

பொதுவாக தல அஜித் தான் சினிமாவில் இருக்கும் மற்ற பிரபலங்களை விட பைக் ரைட்டில் அதிக ஆர்வம் காட்டுவார். அதேபோல் கனிகாவிற்கு நீண்ட நாட்களாக பை ஒட்ட வேண்டும் என்ற ஆசை இருந்தாலும் அதனால் ஏற்படும் பயத்தை விடுத்து தற்போது பைக் ஒட்டி உள்ளாராம்.

எனவே கற்க வேண்டிய விஷயங்கள் காலநேரம் பார்க்காமல், கற்று கொள்ளும் ஆர்வம் இருக்கும் பொழுதே அதை செய்து விடுங்கள் என்றும் இந்த வீடியோவுடன் கனிகா கருத்து பதிவிட்டுள்ளார்.

தற்போது சமூக வலைத்தளங்களில் கனிகா ஹார்லி டேவிட்சன் பைக்கை ஓட்டி கெத்து காட்டும் புகைப்படங்களும் வீடியோக்களும் தல அஜித்தின் ரசிகர்களால் அதிக ஆர்வத்துடன் ஷேர் செய்யப்படுகிறது.

வாழ்க்கையில் நான் எடுத்த தவறான முடிவு.. பாரதிகண்ணம்மா வெண்பா வெளியிட்ட பதிவு

விஜய் டிவியில் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் பாரதி கண்ணம்மா. இதில் கண்ணம்மா என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை ரோஷினி நடித்து வருகிறார். கண்ணம்மாவின் மேல் கொண்ட சந்தேகத்தினால் பாரதி, கண்ணம்மா இருவரும் பல வருடங்களாக ...