37 வருடங்களாக தமிழ் சினிமாவில் யாராலும் முறியடிக்க முடியாத சாதனை.. இன்றளவும் மோகனை கொண்டாடும் ரசிகர்கள்

1980-வது காலகட்டத்தில் தமிழ் திரைப்படங்களின் மூலம் மக்களுக்கு மிகவும் பரிச்சயமானவர் நடிகர் மோகன். கன்னடம், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழி திரைப்படங்களில் நடித்தாலும் தமிழ் திரைப்படங்கள் அவரை பிரபலமாக்கியது.

பெரும்பாலும் தமிழில் இவர் மைக் பிடித்து பாடல் பாடும் பாடகர் கதாபாத்திரத்தில் ஏராளமான திரைப்படத்தில் நடித்துள்ளார். இதனால் அவர் மைக் மோகன் என்று ரசிகர்களால் அழைக்கப்பட்டார்.

1984-ஆம் ஆண்டு அந்த வருடத்தில் மட்டும் 19 திரைப்படத்தில் நடித்த பெருமைக்குரியவர் நடிகர் மோகன். இதுவரை வேறு எந்த நடிகரும் இந்த சாதனையை முறியடிக்க வில்லை. அந்தப் படங்களின் பட்டியல் இதோ.

குவா குவா வாத்துக்கள், விதி, நூறாவது நாள், வேங்கையின் மனிதன், நான் பாடும் பாடல், நலம் நலம் அறிய ஆவல், சட்டத்தை திருத்துங்கள், சாந்தி முத்துராம், இருபத்தி நான்கு மணி நேரம், மகுடி, அன்பே ஓடிவா, ருசி, நிரபராதி, அம்பிகை நேரில் வந்தாள், ஓ மானே மானே, ஓசை, வாய்ப்பந்தல், உன்னை நான் சந்தித்தேன், நெஞ்சத்தை அள்ளித்தா.

கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு 19 திரைப்படங்களுக்கு மேல் நடித்து சாதனைப் படைத்துள்ளார் மைக் மோகன். தற்போது வரை இந்த சாதனையை கோலிவுட் வட்டாரத்தில் எந்த ஒரு நடிகராலும் முறியடிக்கப்பட முடியவில்லை.

தேவாவின் வாழ்க்கையை மாற்றிய பிரபலம்.. சூப்பர்ஸ்டாருக்கு செய்த தரமான சம்பவம்

தமிழ் சினிமாவில் பல சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்தவர் தேனிசைத் தென்றல் தேவா. இவர் கானா பாடலுக்கு பெயர் போனவர். இவரது இசையில் வெளியான கானா பாடல்கள் இன்றுவரை ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்று ...
AllEscort