350 பெண்களுடன் படுக்கையை பகிர்ந்த கே ஜி எப் பிரபலம்.. தந்தை தயவால் போலீஸிடம் இருந்து எஸ்கேப்

கே.ஜி.எஃப் 2 படத்தில் வில்லனாக நடிப்பதன் மூலம் தற்போது தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமாகி உள்ளவர் சஞ்சய் தத். படங்களின் மூலம் தற்போது தான் அறிமுகமாகிறார் என்றாலும் மும்பை குண்டு வெடிப்பு சம்பவம் மூலம் ஏற்கனவே நல்ல பரிட்சயமே.

ஹிந்தியில் 1980 பிற்பகுதி முதல் 2000 தொடக்கம் வரை முன்னணி நடிகராக வலம் வந்தவர் சஞ்சய் தத், ஏற்ற இறக்கங்கள் கொண்ட இவரது சினிமா வாழ்க்கை போலவே நிஜ வாழ்க்கையிலும் பெரும் சர்ச்சைகளை சந்தித்தவர். பழம்பெரும் பாலிவுட் சுனில் தத்தின் மகனான இவர் அறிமுகமான முதல் படத்திலேயே வெற்றி கண்டவர்.

ஆனால், பின்நாளில் போதைக்கு அடிமையாகி வாய்ப்புகள் குறைந்து போகவே, தந்தையின் தலையிட்டால் போதை பழக்கத்தில் இருந்து மீண்டு பின்னர் படங்களில் மறுபடியும் நடித்து வந்தார்.

சர்ச்சைகளால் அலங்கரிக்கப்பட்ட இவரது வாழ்வை மையமாகக் கொண்டு 2018ஆல் ராஜ்குமார் ஹிராணி இயக்கத்தில் ரன்பீர் கபூர் நடித்து சஞ்சு என்னும் படம் வெளியானது. தன்னுடைய பயோகிராஃபியில் சஞ்சய் தத், தன்னுடைய வாழ்நாளில் 350ற்கும் மேற்பட்ட பெண்களுடன் படுக்கையை  பகிர்ந்துள்ளதாக கூறியுள்ளார்.

1993ஆம் ஆண்டில் மும்பையில் ஏற்பட்ட தொடர் குண்டு வெடிப்பின் போது உரிய ஆவணங்கள் இன்றி ஆயுதங்களை வைத்திருந்தமையால் கைதாகி தந்தையின் தலையிட்டால் ஜாமீனில் வெளி வந்தார். இருப்பினும் அந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் அவ்வப்போது சிறை சென்றும் வந்துள்ளார். கடந்த 2007ஆம் ஆண்டு அந்த குண்டு வெடிப்பில் இவர் மேல் போடப்பட்ட அனைத்து வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட்டது. ஆனால் ஆயுதம் வைத்திருந்ததால் 5 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது. 2013ஆம் ஆண்டில் சிறைக்கு சென்றவர், நல்லொழுக்க அடிப்படையில் 2016ஆம் ஆண்டு விடுவிக்கப்பட்டார்.

தற்போது மீண்டும் படங்களில் நடித்து வருகிறார் சஞ்சய் தத். மூன்று முறை திருமணமான இவரின் வாழ்க்கை பாலிவுட் ரசிகர்களால் பெரிதும் பேசப்பட்ட விஷயங்களில் ஒன்றாகும்.