300 எபிசோடுகளாக ஒரே மூஞ்சிய பார்க்க முடியல.. ரஞ்சிதாவை தூக்கிவிட்டு ஜானுவை களம் இறக்கிய விஜய் டிவி

விஜய் டிவியில் நல்ல வரவேற்பு பெற்று வரும் தொடர் தான் நாம் இருவர் நமக்கு இருவர். இதில் கதாநாயகனாக மிர்ச்சி செந்திலும், கதாநாயகியாக ரக்ஷிதாவும் நடித்து வருகிறார்கள். இத்தொடரில் மிர்ச்சி செந்தில் மாயன், மாறன் என இரு வேடங்களில் நடித்து வருகிறார்.

இதில் மாயன் மனைவியாக மகா கதாபாத்திரத்தில் ரக்ஷிதா நடித்திருந்தார். நாம் இருவர் நமக்கு இருவர் தொடர் கிட்டத்தட்ட 300 எபிசோடுகளுக்கு மேல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில் ரக்ஷிதாக்கு பதிலாக வேறு ஒரு நடிகையை மகா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

விஜய் டிவியின் பிரபல தொடரான சரவணன் மீனாட்சியில் ரக்ஷிதா மீனாட்சியாக நடித்திருந்தார். இத்தொடர் மூலம் இவருக்கு பலர் ரசிகர் கூட்டம் இருந்தது. இதை தொடர்ந்து விஜய் டிவியில் பல தொடர்களில் நடித்து வந்த ரக்ஷிதா கடைசியாக நாம் இருவர் நமக்கு இருவர் தொடரில் நடித்து வந்தார்.

ஆரம்பத்தில் அதிக முக்கியத்துவம் தந்த மகா கதாபாத்திரம் தற்போது ஒரு சில காட்சிகள் மட்டுமே ரக்ஷிதாவுக்கு கொடுக்கப்படுகிறது. இதனால் நாம் இருவர் நமக்கு இருவர் தொடரின் குழுவினருக்கும் ரக்ஷிதாவிற்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டதால் தொடரிலிருந்து ரக்ஷிதா விலகிவிட்டதாக கூறப்படுகிறது.

தற்போது மகா கதாபாத்திரத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பான அரண்மனைக்கிளியில் ஜானு கதாபாத்திரத்தில் நடித்த மோனிஷா நாம் இருவர் நமக்கு இருவர் தொடரில் நடித்து வருகிறார். இன்று எபிசோடில் மோனிஷா வருவதால் பல நாள் கழித்து விஜய் டிவியில் மோனிஷாவின் ரீ-என்ட்ரியை பார்ப்பதற்காக அவரது ரசிகர்கள் ஆர்வமாக காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

மூர்த்திக்கு ஷாக் கொடுத்த ஐஸ்வர்யா.. குத்தி விட்ட வேடிக்கை பார்க்கும் மீனா

விஜய் டிவியின் ப்ரைம் டைம் சீரியலான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் கூட்டுக் குடும்பத்தின் மகத்துவத்தை ரசிகர்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டுகிறது. இந்த காலகட்டத்தில் இதெல்லாம் சாத்தியமா என சிலர் கூறினாலும், கூட்டுக்குடும்பத்தில் என்னென்ன லாப ...