30 ஆண்டுகளாக தமிழ் சினிமாவை ஆட்டிப் படைத்த எம்ஜிஆர்,சிவாஜி.. ஒன்றாக நடித்த படம் எது தெரியுமா?

தமிழ் சினிமா தொடங்கிய காலத்தில் இருந்து இன்று வரை நம் தமிழ் சினிமாவில் பல நடிகர்கள் தங்களுக்கு என்று ஒரு நிலையான இடத்தை பிடித்துள்ளனர். ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் சில நடிகர்கள் மட்டுமே தங்கள் ஆதிக்கத்தை செலுத்தி வந்தனர்.

இவ்வாறு நம் தமிழ் சினிமாவில் பல காலம் நீடித்து நிலைத்த நடிகர்கள் என்றால் அது சிவாஜி கணேசன் மற்றும் எம்ஜிஆர் அவர்கள் தான். 1950, 60, 70 காலகட்டங்களில் தமிழ் சினிமாவை ஆண்டவர்கள் இவர்கள் இருவர் மட்டுமே.

1954-ஆம் ஆண்டு வெளிவந்த கூண்டுக்கிளி என்ற திரைப்படத்தில் சிவாஜி கணேசன் மற்றும் எம்ஜிஆர் இணைந்து நடித்துள்ளனர். டி.ஆர்.ரமணா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்திற்கு பிறகு அவர்கள் இணைந்து நடிக்கவில்லை.

அதன் பிறகு அவர்களுக்கு என்று தனி ஸ்டைலில் நடிக்க ஆரம்பித்து தமிழ் சினிமாவின் இரு சிகரங்களாக உயர்ந்தனர். 1936 இல் ஆரம்பித்த எம்ஜிஆர் அவர்களின் திரைப்பயணம் 1978 வரை நீடித்தது. அதன்பிறகு அவர் அரசியலுக்கு வந்து தமிழக முதல்வராக மூன்று முறை பதவி ஏற்றார்.

நடிகர் சிவாஜி கணேசன் அவர்கள் 1999 வரை திரைப்படங்களில் நடித்தார். கமல், ரஜினி, சத்யராஜ், விஜய் போன்ற அனைத்து காலகட்ட நடிகர்களுடனும் இணைந்து நடித்துள்ளார். இவரும் அரசியலுக்கு வர ஆசைப்பட்டு கட்சி தொடங்கினார் ஆனால் அந்த ஆசை அவருக்கு கைகூடவில்லை.

இவர்களைப் போன்றே தமிழ் சினிமாவில் அடுத்த காலகட்டங்களிலும் கமல்-ரஜினி, அஜித்-விஜய் போன்ற நடிகர்கள் தங்களுக்கென ஒரு இடத்தை பிடித்து இன்று வரையில் நீடித்து நிற்கின்றனர்.

உயரத்தில் ஹீரோக்களுக்கு டஃப் கொடுக்கும் 7 நடிகைகள்.. அனுஷ்காவை தூக்கி சாப்பிட்ட அரேபிய குதிரை

ஹீரோக்களை விடவும் சில ஹீரோயின்கள் உயரமாக உள்ளனர். அதனால் சில சமயங்களில் ஹீரோவை உயரமாக காட்டுவதற்காக இயக்குனர்கள் சில உத்திகளைப் பயன்படுத்துகிறார்கள். மேலும் ரசிகர்களும் உயரமாக உள்ள நடிகைகள் மீது கவரப்படுகிறார்கள். அவ்வாறு தமிழ் ...