3 விதமான வெர்ஷனில் வெளிவரும் விஜய்யின் பேட்டி.. விஜய் டிவி டிஆர்பி-க்கு செம ஆப்பு

தற்போது தொலைக்காட்சிகளில் போட்டியாக பார்ப்பதும் சன் டிவி மற்றும் விஜய் டிவிதான். இந்த இரண்டு சேனல்கள் தான் அதிக டிஆர்பியை பெற்று வருகிறது. அதிலும் விஜய் டிவி பெரும்பாலான நேரங்களில் முதலிடத்தை பிடிக்கிறது.

இந்நிலையில் விஜய் டிவியின் டிஆர்பியை தும்சம் செய்வதற்காக சன் டிவி தளபதியை இறக்கியுள்ளது. அதாவது பீஸ்ட் படத்தில் நடித்துள்ள தளபதி விஜய் பத்து வருடங்களுக்கு பிறகு சன் டிவியில் பேட்டி கொடுத்துள்ளார். இதில் இப்படத்தின் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் தொகுப்பாளராக உள்ளார்.

கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கு மேலாக நடந்து இருக்கும் இந்த பேட்டி வருகிற 10ஆம் தேதி சன் டிவியில் ஒளிபரப்பாகயுள்ளது. இந்நிலையில் விஜய் இந்த பேட்டிக்கு 7 செகண்டுக்கு 7 லட்சம் பெற்றுள்ளாராம். மேலும் சன் டிவி இதை வைத்து கோடி கோடியாய் சம்பாதிக்கும் எண்ணத்தில் இருக்கிறது.

இந்தப் பேட்டி மூன்று விதமாக எடுத்துள்ளனர். அதாவது ரசிகர்களுடன் நேருக்கு நேராக விஜய் உரையாடுவதாகவும், நெல்சன் விஜய்யை பேட்டி எடுப்பது பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது. ஆனால் இதில் எது டெலிகாஸ்ட் ஆகப் போகிறது என்பது பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது.

இதனால் ரசிகர்கள் இந்தப் பேட்டியை பார்க்க ஆர்வமாக காத்திருக்கின்றனர். மேலும் பீஸ்ட் படத்தில் உள்ள சில அப்டேட்டுகள் வெளியாகும் எனவும் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இதை வைத்து கோடிகோடியாக பணம் பார்க்க சன் டிவி திட்டம் போட்டுள்ளது.

இதனால் விஜய் டிவியின் டிஆர்பி சரியா அதிக வாய்ப்பு உள்ளது. மேலும், விஜய் டிவி தனது டிஆர்பியை தக்கவைத்துக்கொள்ள விஜய் டிவியின் செல்ல பிள்ளை சிவகார்த்திகேயன் இறக்கவும் வாய்ப்புள்ளது. ஆனால் அது எந்த அளவுக்கு வொர்க் அவுட்டாகும் என்பது தெரியவில்லை.