3 வாரம் கழித்துதான் சுயரூபமே தெரியும்.. பிக்பாஸ்-ஐ பற்றி புட்டு புட்டு வைக்கும் மாஸ்டர்

தொடக்கத்தில் சின்னத்திரையிலும் அதன்பிறகு திரைப்படங்களில் நடன இயக்குனராக பணியாற்றி தற்போது ஹீரோவாக 3:33  என்னும்  ஒரு ஹாரர் படத்தில் சாண்டி மாஸ்டர் அவதாரம் எடுத்துள்ளார். நம்பிக்கை சந்துருவின் இயக்கத்தில் உருவாக உள்ள, இந்தப் படத்தில் சாண்டி உடன் கௌதம்மேனன், ரேஷ்மா, பசுபுலேட்டி  உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

விரைவில் ரிலீசாக உள்ள 3:33 என்னும் பேய் படமானது காமெடியை மையப்படுத்தாமல் கொடூரமான திரில்லர் படமாகவே உருவாக்கப்பட்டுள்ளதாம். எனவே எப்போதும் ஜாலியாக பார்த்த சாண்டியை இந்தப்படத்தில் கொடூரமாக காண்பிக்க உள்ளனர். இந்தப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது

சாண்டி கலைஞர் டிவியில் ஒளிபரப்பான மானாட மயிலாட என்னும் பிரபல நடன நிகழ்ச்சியில்  சீசன்1ல் நடன இயக்குனராக தனது பயணத்தை ஆரம்பித்த சாண்டி மாஸ்டர்  சிம்புவின் வாலு, உதயநிதி ஸ்டாலினின் கெத்து, ரஜினிகாந்தின் காலா  உள்ளிட்ட பல படங்களுக்கு நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார்.

அத்துடன் ரசிகர்களின் மனங்களை பெரிதும் கவர்ந்த பிக் பாஸ் சீசன்3ல் சாண்டி மாஸ்டர் போட்டியாளராக கலந்து கொண்டு இரண்டாம் பரிசையும் தட்டிச் சென்றார். மேலும் சாண்டி மாஸ்டர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தன்னுடைய இயல்பான குணத்தையும், போட்டியாளர்களை கலகலப்பாக வைத்துக்கொண்ட மனப்பக்குவத்தை பார்த்த பலரும் அவரை வியந்து பாராட்டினர்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் சாண்டி மாஸ்டர் பாடிய கானா பாட்டும் பிக்பாஸ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து, அவருக்கு ரசிகர் பட்டாளம் பெருகியது. எனவே பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தான் சாண்டிக்கு இவ்வளவு பெரிய பட வாய்ப்பு கிடைத்தது என்று அவரே சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

மேலும் பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சி குறித்து அவரிடம் கேட்டபோது மூன்று வாரம் கழித்து தான் போட்டியாளர்களின் சுயரூபம் தெரியும் என்றும் சூட்சமமாக பதிலளித்துள்ளார். அதுமட்டுமின்றி திருநங்கை நமீதா பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கலக்குவார் என்று நினைத்துக்கொண்டிருந்த நிலையில் திடீரென்று விலகியதால் தனக்கு வருத்தத்தை அளித்ததாகவும் சாண்டி தெரிவித்திருந்தார்.

டிஆர்பி ரேட்டிங்கில் விஜய் டிவியை தாங்கி பிடிக்கும் ஒரே சீரியல்.. இல்லனா சன் டிவி தான் டாப்

தொலைக்காட்சித் தொடர்களை பார்க்கும் ரசிகர்களுக்கு அனுதினமும் சுவாரஸ்யம் குறையாத எபிசோடுகளை வழங்குவதின் மூலம் தான், சீரியல்களை பார்க்கும் ரசிகர்களின் எண்ணிக்கையை அதிகரித்து டிஆர்பி ரேட்டிங்கை உயர்த்த முடியும். இந்த வேலையை விஜய் டிவியும் சன் ...
AllEscort