தமிழ் சினிமாவில் தளபதி படத்தின் மூலம் அறிமுகமான அரவிந்த்சாமி அதன் பிறகு பல படங்களில் நடித்தார். ரோஜா, பாம்பே மற்றும் அலைபாயுதே போன்ற பல படங்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமடைந்த அரவிந்த்சாமி அதன் பிறகு சரியான கதையை தேர்ந்தெடுக்காமல் ஒரு சில தோல்விப் படங்களை கொடுத்தார்.

அதன் பிறகு பெரிய அளவில் பட வாய்ப்புகள் வராததால் சினிமாவை விட்டு விலகி தொழில் துறையில் கவனம் செலுத்தி வந்தார். பின்பு மோகன் இயக்கிய தனி ஒருவன் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து மீண்டும் தனது இடத்தை தக்கவைத்துக் கொண்டார். தற்போது பல படங்களில் நடித்து வருகிறார்.

சதுரங்க வேட்டை, வணங்காமுடி மற்றும் புலனாய்வு போன்ற படங்களில் நடித்துள்ளார். ஆனால் இந்த படங்களில் எந்த படம் முதலில் வெளியாகும் என்பதில்தான் சிக்கல் எழுந்துள்ளது. அதாவது 3 படங்களிலுமே அரவிந்த்சாமி பாதி காட்சிகள் மட்டும் நடித்துள்ளார். இதனால் தற்போது இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் எந்த படத்தை முதலில் வெளியிடுவது என்பது தெரியாமல் தவித்து வருகின்றனர்.

மூன்று படங்களிலும் 50% நடித்துக் கொடுத்துள்ள அரவிந்த்சாமி சம்பள பாக்கி இருப்பதால் அடுத்து யார் படத்தில் நடிக்க வேண்டும் என்பதை இன்னும் முடிவு செய்யவில்லையாம். அதாவது அட்வான்ஸ் வாங்காமலேயே 50% நடித்துக் கொடுத்துள்ளார் அரவிந்த்சாமி. பட தயாரிப்பாளரின் கஷ்டத்தை புரிந்து இதுபோன்று நல்ல விஷயங்களை செய்து வருகிறார். ஆனாலும் இவரை கஷ்டப்படுத்தி பார்ப்பது நியாயமா என்று கோலிவுட் வட்டாரங்கள் கேள்வி கேட்டு வருகின்றனர்.

மேலும் 3 படத்தின் இயக்குனர்களும் அரவிந்த் சாமி இடம் முதலில் தங்கள் படத்தில் நடித்துக் கொடுக்குமாறு கேள்வி கேட்டு வருகின்றனர். இதனால் அரவிந்த் சாமிக்கு முதலில் யார் படத்தில் நடிப்பது என தெரியாமல் தவித்து வருகிறார். ஆனால் இந்த 3 படங்களை விட நரகாசுரன் படத்தில் ஒரு சில காட்சிகள் தான் நடிக்க வேண்டும். அதனால் தற்போது அரவிந்த்சாமி நரகாசுரன் படத்தில் நடித்து முடித்த பிறகு மற்ற படங்களில் நடிப்பார் என கூறி வருகின்றனர்.

தற்போது நரகாசுரன் படத்தில் அரவிந்த்சாமி வைத்து எடுக்க வேண்டிய காட்சிகளை எடுத்து வருவதாகவும் கூடிய விரைவில் இப்படத்தின் திரையரங்கில் வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனால் அரவிந்த்சாமி தற்போது பிஸியாக நரகாசுரன் படத்தில் சில காட்சிகள் மட்டும் நடித்து வருகிறார்.