3 தேசிய விருது வாங்கிய படத்தை தவறவிட்ட துல்கர் சல்மான்.. ரீமேக் வாய்ப்பை தட்டி தூக்கிய பிரசாந்த்

துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான படங்கள் சமீபகாலமாக பெரிய வரவேற்பைப் பெற்று வருகின்றன. அதுவும் இவர் நடிக்கும் படம் மீதான எதிர்பார்ப்பும், படத்தின் கதை அம்சம் தான் படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக உள்ளது. அந்த அளவிற்கு கதையை சரியாக தேர்வு செய்து நடித்து வருகிறார்.

இவர் தமிழில் வாயை மூடி பேசவும் மற்றும் ஓ காதல் கண்மணி போன்ற படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் கூட துல்கர் சல்மான் குரூப் எனும் படத்தில் நடித்துள்ளார். இப்படம் அனைத்து மொழிகளிலும் வெளியாகி உள்ளது.

இப்படத்தில் துல்கர் சல்மான் கதாபாத்திரமும் கெட்டப்பும் பெரிய அளவில் பேசப்பட்டது. தற்போது ஒரே நாளில் 54 லட்சம் வரை இப்படம் வசூல் சாதனை படைத்துள்ளது. இதனால் தற்போது படக்குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளனர். இப்படத்தின் ப்ரோமோஷன் நடைபெற்றபோது துல்கர் சல்மான் பல பேட்டிகள் கலந்துகொண்டு படத்தினை பற்றி கூறிவந்தார்.

அப்போது துல்கர் சல்மான் ஹிந்தியில் வெளியான அந்தாதுன் படத்தின் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு கேட்டுள்ளனர். ஆனால் அப்போது துல்கர் சல்மான் ஏராளமான படங்கள் நடித்து வந்ததால் இதனைப் பற்றி பெரிதாக கண்டுகொள்ளவில்லை.

மேலும் துல்கர் சல்மானின் மேனேஜரும் அந்தாதுன் படத்தின் படக்குழுவினரும் சரியாக பேச்சுவார்த்தை நடத்தி கொள்ளாததால் அந்த படத்தில் நடிக்க முடியாமல் போனது என வெளிப்படையாக கூறினார். ஆனால் இப்படம் ஹிந்தியில் வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது.

இப்படம் துல்கர் சல்மான் நடித்திருந்தால் மேலும் இவருக்கு ஹிந்தியில் பெரிய அளவில் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்திருக்கும்.  இப்படம் நடிக்க முடியாமல் தவறவிட்டதால் அடுத்தடுத்து படங்கள் நடிக்க முடியாமல் போனதாக தெரிவித்தார்.

விறுவிறுப்பாக தனது அடுத்த படத்தை முடித்த லிங்குசாமி.. ஹீரோ யார் தெரியுமா.?

தமிழ் சினிமாவில் ரன், ஆனந்தம், பையா, சண்டைக்கோழி போன்ற பல வெற்றி படங்களை வழங்கியவர் தான் இயக்குனர் லிங்குசாமி. ஆனால் இறுதியாக இவர் இயக்கத்தில் வெளியான அஞ்சான், சண்டைக்கோழி 2 போன்ற படுதோல்வியை சந்தித்ததால், ...