280 கோடி பட்ஜெட் படத்தில் விலைமாதுவாக நடிக்கும் ராஷ்மிகா.. அதிர்ச்சியில் ரசிகர்கள்

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை ராஷ்மிகா மந்தனா. தற்போது தமிழ் மற்றும் தெலுங்கில் பிசியாக நடித்து வரும் ராஷ்மிகா ஹிந்தியிலும் கால் பதித்து விட்டார். இவர் நடிப்பில் மட்டும் தற்போது ஹிந்தியில் இரண்டு படங்கள் உருவாகி வருகிறது.

அதேபோல் தெலுங்கில் முன்னணி நடிகர் அல்லு அர்ஜுன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள புஷ்பா படத்தில் ராஷ்மிகாவும் ஒரு வெயிட்டான கதாப்பாத்திரத்தில் நடிந்துள்ளார். ராம் சரண் மற்றும் சமந்தா நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ரங்கஸ்தலம் பட இயக்குனர் சுகுமார் தான் புஷ்பா படத்திற்கு கதை, திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார்.

சுமார் 280 கோடி ரூபாயில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இப்படத்தில் அல்லு அர்ஜுனுக்கு வில்லனாக பிரபல மலையாள நடிகர் பகத் பாசில் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என 5 மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்நிலையில் புஷ்பா படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா விலை மாதுவாக நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் ராஷ்மிகாவின் போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டிருந்தது. அந்த போஸ்டரில் பாவாடை ஜாக்கெட்டுடன் இருக்கும் ராஷ்மிகா மந்தனா, சீவி சிங்காரித்து காதில் தோடு போட்டு கொண்டிருப்பது போல காட்சி அளித்திருந்தார்.

அதை பார்க்கும் போது ஒரு ஏழை வீட்டு பெண்ணாக இருக்கும் ராஷ்மிகா மந்தனா தனது குடும்ப வறுமைக்காகவும், சூழ்நிலை காரணமாகவும் விபசாரத்திற்குள் தள்ளப்பட்டது போல் இருப்பதாக சிலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இருப்பினும் படம் வெளியானால் மட்டுமே இந்த தகவல் உண்மையா என்பது தெரிய வரும்.

கே பாலச்சந்தர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த 5 படங்கள்.. குருவும் சிஷ்யனும் வேற லெவல் போங்க

கே பாலச்சந்தர் பல நடிகர் நடிகைகளை தன் படத்தின் மூலம் அறிமுகம் செய்துள்ளார். அபூர்வ ராகங்கள் திரைப்படத்தின் மூலம் ரஜினியை தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தினார். அபூர்வ ராகங்கள்: 1975 ஆம் ஆண்டு வெளியான அபூர்வ ...