25 வருடம் கழித்து மீண்டும் இணையும் பிரபுதேவா, அரவிந்த்சாமி.. அஜித்தின் சூப்பர் ஹிட் இயக்குனருடன் கூட்டணி

தமிழ் சினிமாவில் சென்னை 28 படம் மூலமாக இயக்குனராக அறிமுகமானவர் தான் இயக்குனர் வெங்கட்பிரபு. அறிமுகமான முதல் படமே மாபெரும் வெற்றி பெற்றதால் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களை இயக்கினார். அந்த வகையில் சரோஜா, கோவா, மங்காத்தா, பிரியாணி உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார்.

படங்கள் இயக்குவது மட்டுமல்லாமல் ஒரு சில படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் வெங்கட்பிரபு நடித்துள்ளார். அந்த வகையில் சமீபத்தில் வெங்கட் பிரபு நடிப்பில் வெளியான கசடதபற படம் மாபெரும் வெற்றி பெற்றது. அதோடு பிரபலங்கள் பலரின் பாராட்டையும் பெற்றது குறிப்பிடத்தக்கது.

தற்போது பிரபல நடிகர் சிம்புவை வைத்து மாநாடு எனும் படத்தை வெங்கட்பிரபு இயக்கி முடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இப்படத்தை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். அதேபோல் இளம் நடிகர் அசோக்செல்வன் நடிப்பில் மன்மதலீலை எனும் படத்தையும் வெங்கட் பிரபு இயக்கியுள்ளார். இப்படமும் இறுதிகட்ட பணியில் உள்ளது.

இப்படங்களை தொடர்ந்து பிரபல கன்னட நடிகர் சுதீப் கிச்சாவை ஹீரோவாக வைத்து புதிய படம் ஒன்றை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி வந்தது. இந்நிலையில் வெங்கட் பிரபு இயக்கும் புதிய படத்தில் நடிகர்கள் பிரபு தேவா மற்றும் அரவிந்த் சாமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

நிதின் சத்யா தயாரிக்கும் புதிய படம் ஒன்றை வெங்கட் பிரபு இயக்க உள்ளாராம். இப்படத்தில் தான் பிரபுதேவா மற்றும் அரவிந்த்சாமி முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். பான் இந்தியா படமாக உருவாக இருக்கும் இப்படத்திற்கு யுவன்சங்கர் ராஜா அல்லது ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கலாம் என கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெறும் 35 கிலோ வைத்துக்கொண்டு இது தேவையா.? கபூர் குடும்பத்தையே மிரள விட்ட அனிருத்

தற்போது தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் பிஸியாக இருக்கும் அனிருத் அடுத்து பாலிவுட்டை டார்கெட் செய்து இருக்கிறார். இங்கே இருந்தால் வளர விட மாட்டார்கள், குண்டு சட்டிக்குள் தான் குதிரை ஓட்ட வேண்டும் என்று ...
AllEscort