24 வருடங்களில் சூர்யாவை அடையாளப்படுத்திய டாப் 5 படங்கள்.. ஒன்னு ஒன்னும் வேற ரகம்

தமிழ் சினிமாவின் முதண்மை நடிகர்களில் ஒருவராய் வலம் வருபவர் நடிகர் சூர்யா. நடிகர் சிவக்குமாரின் மகன் என்கிற அடையாளத்தோடு தமிழ் சினிமாவில் கால் பதித்தவர் . விஜய் பிரசாந்த் கார்த்திக் வரிசையில் அடுத்த ஒரு வாரிசு நடிகராய் களமிறங்கினார்.

என்னதான் வாரிசுகளாக களம் கண்டாலும் தமிழ் சினிமா அத்தனை எளிதில் யாரையும் அங்கீகரித்ததில்லை. எல்லோரையும் போல பல்வேறு சங்கடங்கள் சறுக்கல்களை கடந்தே இப்போது பல லட்சம் ரசிகர்கள் கொண்டாடும் நடிகராய் வலம் வருகிறார் நடிகர் சூர்யா.

அப்படியாக அவரின் சில ஹிட் படங்களை பற்றி பார்ப்போம்.

நந்தா: 2001-ல் வெளியான இப்படம் சூர்யாவின் கெரியரில் ஒரு மைல்கல்லாக அமைந்தது என்றால் மிகையாகாது. வழக்கமாகவே வித்யாசமான ரோல்களால் மிரட்டும் இயக்குனர் பாலாவின் கைவண்ணத்தில் அட்டகாசமான படமாக வந்தது நந்தா.

பேரழகன்: 204-ல் வெளியான பேரழகன் நடிகை ஜோதிகா மற்றும் சூர்யாவின் இரட்டை வேடங்களில் இரட்டிப்பு சந்தோசத்தை ரசிகர்களுக்கு தந்தது என்றால் மிகையாகாது. இருவருக்கும் சவாலான கேரக்டராக அமைந்திருந்தது ஊணமுற்ற கேரக்டர்கள் தான் இவற்றை சரியாக காட்டியிருப்பார் இயக்குனர் சசி சங்கர்.

கஜினி: இயக்குனர் முருகதாஸ் சூர்யா கூட்டணியில் முதல் படமாக அமைந்தது கஜினி . இப்படத்தில் வரும் அம்னீசியா கேரக்டர் பலராலும் பாராட்டுகளை பெற்றது. அசின் நயன்தாரா என இரு நாயகிகளுடன் 2005-ல் வெளியான இப்படம் ரசிகர்களால் சூர்யாவை தலையில் தூக்கி கொண்டாடப்பட்டது.

வாரணம் ஆயிரம்: 2008-ல் வெளிவந்த இப்படம் இயக்குனர் கௌதம் மேனனுக்கே ஒரு மைல் கல்லாக அமைந்தது. ஒரு பக்கம் ஆக்சன் ஒரு பக்கம் ரொமாண்டிக் என அழகாக படைத்திருப்பார். சமீரா ரெட்டியுடனான கேரக்டர் தனியாகவும் திவ்யாவுடனான கேரக்டரில் தனித்துவத்தையும் காட்டியிருப்பார். இரட்டை வேடத்தில் சூர்யா அப்பா மகன் கேரக்டரில் அசத்தியிருப்பார்.

24: 2016-ல் வெளியான 24 மூண்று வித்யாசமான கேரக்டர்களில் அசத்தியிருந்தார் சூர்யா. லட்சுமி மேனன் சமந்தா என இரு நாயகிகள் அப்பா சித்தப்பா மகன் என 3 வித்யாசமான கேரக்டர் வில்லனும் ஹீரோவும் சூர்யா என டிரண்டிங் ஆனது. ஒரு கடிகாரத்தால் கதை சொல்ல முடியும் என்றால் அது சாத்தியப்பட்டது இப்படத்தின் வாயிலாக வருங்காலம் கடந்த காலம் என இரண்டையும் அழகாக காட்டியிருப்பார் இயக்குனர்.