22 வருடம் கழித்து சூப்பர் ஸ்டாருடன் இணைந்த முரட்டு வில்லன்.. ஹிட்டடிக்கும் காம்போ!

கடந்த 1999 ஆம் ஆண்டு பிரபல இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் அவர்களால் இயக்கப்பட்ட மாபெரும் வெற்றி படம்தான் படையப்பா. இதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் கதாநாயகனாகவும் முக்கிய வேடத்தில் நடிகர் திலகம் சிவாஜி அவர்களும் நடித்திருப்பர். இந்த வெற்றிப் படத்தில் பிரகாஷ்ராஜ் வில்லத்தனமாக நடித்திருந்தார். இவர் ரஜினியுடன் இணைந்த முதல் படம் இது.

மீண்டும் ஒரு மாபெரும் வெற்றி படத்தில் 21 வருடம் கழித்து இந்த இரு துருவங்களான பிரகாஷ்ராஜும், ரஜினியும் இணைந்து பிரம்மாண்டமாக உருவாகி தீபாவளியன்று வெளிவர காத்திருக்கும் படம்தான் அண்ணாத்த. இது ஒரு ஆக்ஷன் மற்றும் நாடகம் கலந்த குடும்பக் கதையாக உள்ளது.

அண்ணாத் படத்தை இயக்குனர் சிவா அவர்கள் இயக்க, கலாநிதி மாறனின் சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு இமான் இசையில் கலக்கலாக உருவாக்கப்பட்டுள்ளது. நேற்று வெளியான அண்ணாத்த படத்தின் டீசர் தாறுமாறாக சோஷியல் மீடியாவில் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது.

இந்தப் படத்தில் ஒரு நட்சத்திரப் பட்டாளமே நடித்து பிரமிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் படத்தில் நடித்த முக்கிய நட்சத்திரங்கள் மீனா, குஷ்பூ, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் மற்றும் சூரி என இன்னும் பலர் நடித்து அசத்தியுள்ள ஒரு சூப்பர் ஹிட் திரைப்படம்.

இந்தப் படத்திலும் பிரகாஷ் ராஜ் வில்லனாக நடித்திருக்கிறார். மீண்டும் நீண்ட நாட்களுக்கு பிறகு இணைந்த இந்த இரு துருவம் வெற்றி காணுமா? என வெயிட் பண்ணி பார்க்கலாம். வரும் தீபாவளி அன்று ரசிகர்களுக்கு விருந்து அளிக்கும் விதமாக அண்ணாத்த படம் ரிலீசாக உள்ளது. இதை காண ரசிகர்கள் ஆர்வத்தின் உச்சத்தில் உள்ளனர்.

இவங்களால தான் சினிமா செத்துப்போச்சு! முன்னணி நடிகர்களை விளாசிய ராதாரவி

திரெளபதி படம் மூலம் ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும் தன் பக்கம் திருப்பியவர் தான் இயக்குனர் மோகன் ஜி. நாடக காதலை மையப்படுத்தி உருவாகி இருந்த இப்படம் பல விமர்சனங்களை சந்தித்தாலும் வசூல் ரீதியாக நல்ல ...