தென்னிந்திய சினிமாவில் தன்னுடைய கிளாமர் கட்டளையின் மூலம் கைக்குள் வைத்திருந்த நடிகை ஒருவர் கிட்டத்தட்ட 22 வருடங்கள் கழித்து மீண்டும் தன்னுடைய பழைய சூப்பர் ஹிட் இயக்குனருடன் கைகோர்க்கும் உள்ள செய்தி தான் சமூக வலைதளத்தை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது. கண்டிப்பாக இந்த படத்திலும் கொஞ்சம் கவர்ச்சி எதிர்பார்க்கலாம்.

கடந்த சில வருடங்களாகவே ஒரு காலத்தில் முன்னணி நடிகைகளாக கலக்கிக் கொண்டிருந்த சில நடிகைகள் தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்து நடிக்க ஆரம்பித்து விட்டனர். சிம்ரன், மீனா, குஷ்பு போன்றோரை குறிப்பிட்டுச் சொல்லலாம். இவர்கள் அனைவருமே அவர்களது காலகட்டங்களில் உச்சத்திலிருந்த நடிகைகள்தான்.

அந்த வரிசையில் இடம் பெற்றவர் தான் மாளவிகா. அரேபியன் குதிரை என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் மாளவிகா கிட்டத்தட்ட 12 வருடங்களுக்கு முன்பே சினிமாவை விட்டு விலகி இல்லற வாழ்க்கையில் செட்டிலாகி விட்டார். அதன் பிறகு சினிமாவில் அதிக கவனம் செலுத்தாத மாளவிகாவுக்கு தற்போது சினிமாவில் நடிக்க ஆசை மீண்டும் வந்து விட்டதாம். கடந்த சில மாதங்களாகவே அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே.

அது எல்லாம் இதற்குத்தானா என சொல்லும் அளவுக்கு இப்போது அவர் படங்களில் நடிக்க கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் சுந்தர் சி இயக்கத்தில் ஜீவா இணைந்து நடிக்கும் புதிய படம் ஒன்றில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளாராம் மாளவிகா. சுந்தர் சி இயக்கி ஆம்பள படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தன்னுடைய செகண்ட் இன்னிங்சை தொடங்கினார்.

அதேபோல் மாளவிகாவுக்கு சுந்தர் சி படம் பெரிய அளவில் கை கொடுக்கும் என்கிறார்கள் சினிமா வட்டாரங்கள். எப்பவும் போல் சுந்தர் சி யின் நகைச்சுவை கதைகளை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் விரைவில் உருவாகி வெகு விரைவில் முடிக்க திட்டமிட்டுள்ளார்களாம். அதேபோல் ஜீவா மற்றும் மிர்ச்சி சிவா இணைந்து நடிக்கும் கோல்மால் என்ற படத்திலும் மாளவிகா நடிக்க அதிக வாய்ப்பு இருக்கிறதாம்.