21 வருடங்களுக்கு முன் கார்த்திக் உடன் ஜோடி சேர மறுத்த சிம்ரன்.. தற்போது சேர்ந்துள்ள சிறப்பான சம்பவம்

கார்த்திக் அமரன் 2 மற்றும் அந்தகன் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவருக்கு தற்போது ஏகப்பட்ட பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றனர். அதுவும் போலீஸ் கதாபாத்திரம் வில்லன் கதாபாத்திரத்திற்கு பெருவாரியான இயக்குனர்கள் கார்த்தியை நேரடியாக அணுகி தங்களது படங்களில் நடிக்க வாய்ப்பு கேட்டு வருகின்றனர்.

கார்த்திக்கும் சிம்ரனும் சினிமாவில் பல காலமாக நடித்து வந்தாலும் தற்போது வரை இணைந்து பணியாற்றாமல் தான் இருந்து வருகின்றனர். ஆனால் ஆரம்ப காலத்தில் இவர்கள் இருவரும் இணைவதற்கான வாய்ப்பு அமைந்தது. பின்பு ஏதோ ஒரு சில காரணங்களால் அந்த வாய்ப்பு பறிபோனது அதற்கு என்ன காரணம் என்பதை பார்ப்போம்.

கார்த்திக், சிம்ரன் இணைந்து ‘அழகான நாட்கள்’ என்ற படத்தில் நடிக்க இருந்தனர். ஆனால் அப்போது படக் குழுவில் ஒரு சில பிரச்சனைகளால் படத்தினை சிறிது மாதங்களுக்கு தள்ளிவைத்தனர். அப்போது சிம்ரனுக்கு ஏகப்பட்ட பட வாய்ப்புகள் வந்ததால் மற்ற படங்களில் நடிக்க கவனம் செலுத்த ஆரம்பித்தார்.

சிம்ரன் பிஸியாக மற்ற படங்களில் நடித்து வந்த நேரத்தில் மீண்டும் படக்குழுவினர் படத்தில் நடிப்பதற்கு சிம்ரனிடம் கால்ஷீட் கேட்டுள்ளனர். ஆனால் அப்போது இவர் பல படங்களுக்கு கால்ஷீட் கொடுத்துள்ளதால் மீண்டும் இப்படத்தில் நடிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அதன்பிறகு படக்குழுவினர் கார்த்திக்கும் ரம்பா வைத்தும் படத்தை எடுத்து முடித்தனர்.

கிட்டத்தட்ட 21 ஆண்டுகளுக்குப் பிறகு கார்த்திக் மற்றும் சிம்ரன் இருவரும் அந்தகன் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். தற்போது இவர்கள் இருவரும் ஒரே படத்தில் நடித்துள்ளதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும் இப்படத்தை கூடிய விரைவில் திரையரங்கில் வெளியிடுவதற்கும் படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.