2022ல் பொதுவெளியில் கோபப்பட்ட 5 சினிமாத்துறையினர்.. ஒருத்தர் மேல் மட்டும் இம்புட்டு கோவமா?

சினிமா பிரபலங்கள் சில சமயம் தங்களது பொறுமையை இழந்து பத்திரிக்கையாளர்கள் கேட்கும் கேள்விக்கு பொது மேடை என்று கூட பார்க்காமல் கோபப்பட்டு விடுவார்கள். அப்படி 2022ஆம் ஆண்டில் மட்டும் பொது மேடைகளில் கோபப்பட்டு பெரும் சர்ச்சையை கிளப்பிய சினிமா பிரபலங்களில் அதிகம் பேசிய ஐந்து நபர்கள் இவர்கள்தான்.

கங்கை அமரன்: சமீபத்தில் கங்கை அமரன் அளித்த பேட்டியின்போது செய்தியாளர் ஒருவர், இளையராஜா எழுதிய ஒரு புத்தகத்திற்கு கங்கை அமரன் எழுதப்பட்டதாகக் கூறப்பட்ட முன்னுரையை குறித்து கேள்வி கேட்டிருக்கிறார். அப்போது அந்த செய்தியாளரை பார்த்து கோபத்தின் உச்சத்துக்கு சென்ற கங்கை அமரன், ‘யோவ், பொறுயா பொறுயா, ஆமா நான் தான் எழுதிக் கொடுத்தேன். அதுக்கு என்ன, அது தெரிஞ்சு நீ என்ன பண்ண போற’ என கோபமாக கத்தினார். இப்படி செய்தியாளர்களுடனும் அரசியல்வாதிகளுடனும் தற்சமயம் கங்கை அமரன் காரசாரமான விவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்.

கௌதம் வாசுதேவ் மேனன்: இவர் இயக்கத்தில் வெளிவந்த படத்தினுடைய பிரஸ்மீட்டிங் போது பத்திரிக்கையாளர் பயில்வான் ரங்கநாதன் கேட்ட கேள்வியால் கடுப்பான கௌதம் வாசு மேனன், ‘ஏண்டா படம் எடுக்கிறோம் என்ற நிலைக்கு தள்ளாதீர்கள். ஏனென்றால் நீங்கள் கேட்கும் கேள்வியால் கஷ்டப்பட்டு எடுக்கிற படத்தை அவமானப்படுத்துவது போல் இருக்கிறது’ என மேடையிலேயே பயில்வான் ரங்கநாதனிடம் கடுப்பாக பேசிவிட்டார்.

பார்த்திபன்: இரவின் நிழல் படத்தில் படத்திற்கான பாடல் வெளியீட்டு விழா நடைபெற்றபோது ஏஆர் ரகுமான், சமுத்திரகனி, மதன் கார்க்கி, கரு பழனியப்பன், ஷோபனா சந்திரசேகர், ரோபோ ஷங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்ட மேடையில் தன்னுடைய பைக் வேலை செய்யாததால் பார்த்திபன் கையிலிருந்த மைக்கை கீழே வீசி தன்னுடைய கோபத்தை காட்டினார். அதன் பிறகு இந்த விஷயத்திற்கு அவர் மன்னிப்பு கேட்டு மீண்டும் தன்னுடைய பேச்சை துவங்கினார். இருப்பினும் அவர் கோபப்பட்ட வீடியோ தற்போது வைரலாக பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது.

பாலா: இவர் இயக்கத்தில் வெளிவந்த படத்தினுடைய பிரஸ்மீட்டிங் போது பத்திரிகையாளராக இருந்த பயில்வான் ரங்கநாதன் கேட்ட கேள்வியால் கடுப்பான பாலா, மேடையிலேயே கோபப்பட்டு அவருடன் காரசாரமான விவாதத்தில் ஈடுபட்டார்.

சாந்தனு: நடிகர் சங்க தேர்தலின்போது பயில்வான் பற்றி செய்தியாளர் கேட்ட கேள்விக்கு, கடுப்பான சாந்தனு, பிறரை பற்றி தரக்குறைவாக பேசி, அதன் மூலம் காசு சம்பாதிக்கும் பொழப்பு தேவையா என்று, இப்படி ஒருத்தரை குறைசொல்லும் பேசுபவரை பற்றி நாம் பேசும் போது அவர் பெரியவராக மாறிவிடுவார். ஆகையால் இவர் மீது நடிகர் சங்கம் பலருடைய நலனுக்காகவே நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயில்வான் மீது கோபப்பட்டு பேசிவிட்டார்.