200 நாட்களைத் தாண்டி வெற்றிகரமாக ஓடிய 7 படங்கள்.. இதுல உங்க ஃபேவரிட் ஹீரோ யாரு.?

பாரதிராஜா இயக்கத்தில்1978ல் வெளியான கிழக்கே போகும் ரயில் இத்திரைப்படத்தில் கதாநாயகியாக ராதிகா அறிமுகமாயிருப்பார். இப்படம் 200 நாட்கள் தாண்டி வெற்றிகரமாக ஓடியது.

ரஜினிகாந்த்: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் திரைப்படங்கள் மாப்பிள்ளை, பாட்ஷா,அண்ணாமலை, படையப்பா ,சந்திரமுகி திரைப்படங்கள் 200 நாள்கள் தாண்டி திரையரங்குகளில் நல்ல வரவேற்பு பெற்ற படங்கள்.

கமலஹாசன்: நாயகன் கமலஹாசனின் 1989 இல் வெளியான அபூர்வ சகோதரர்கள்,1982-ல் வெளியான வாழ்வே மாயம் மற்றும் மூன்றாம் பிறை,1980களில் குரு ஆகிய திரைப்படங்களும் வெற்றிப் படமாக அமைந்தது.

மோகன்: மோகன் அவர்களின் அதிக திரைப்படங்கள் திரையரங்குகளில் அதிக நாட்கள் திரையிடப்பட்டன. விதி,பயணங்கள் முடிவதில்லை,மௌன ராகம் போன்ற படங்கள் அதிக நாட்கள் ஓடின.

விஜயகாந்த்: புரட்சிக் கலைஞர் விஜயகாந்தின் திரைப்படங்கள் 1990ல் வெளியான புலன் விசாரணை,1992 இல் வெளியான சின்ன கவுண்டர் அதிக நாள் ஓடி வசூல் சாதனை படைத்தது.

ராமராஜன்: 1989 இல் வெளியான கரகாட்டக்காரன் இத்திரைப்படத்தில் ராமராஜன் ,கனகா, கவுண்டமணி,செந்தில், கோவை சரளா போன்றோர் நடித்திருந்தனர். இப்படம் திரையரங்குகளில் அதிக நாள் ஓடியது.

சரத்குமார்: 1998 இல் வெளியான நட்புக்காக திரைப்படத்தில் விஜயகுமார் மற்றும் சரத்குமார் நடித்திருந்தனர். இது வெற்றிப்படமாக அமைந்தது.சரத்குமார் நடித்த நாட்டாமை, சூரியவம்சம் போன்ற திரைப்படங்கள் அதிக நாட்கள் ஓடி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

விஜய், அஜித்: தளபதி விஜய் தல அஜித் ஆகிறது திரைப்படங்கள் 1996 இல் வெளியான பூவே உனக்காக, காதல் கோட்டை ஆகிய திரைப்படங்கள் 200 நாட்களுக்கு மேல் ஓடி வசூல் சாதனை படைத்தது.

படு உஷாரான சிம்பு.. தனுசை வைத்து நகர்த்திய காய்

சிவாஜி, எம்ஜிஆர் காலத்திலிருந்தே தமிழ் சினிமாவில் இரு நடிகர்களின் ரசிகர்களுக்கு இடையே கடுமையான போட்டி நிலவும். அதாவது எம்ஜிஆர்-சிவாஜி தொடர்ந்து ரஜினி-கமல் அதன்பின்பு விஜய்-அஜித் என இந்த இரட்டை நடிகர்களின் போட்டிகள் தலைமுறைகளாக தொடர்ந்து ...