200 கோடி குவித்து கல்லாவை ரொப்பிய 5 விஜய் படங்கள்.. இன்று வரை சுற்றி, சுற்றி வரும் தயாரிப்பாளர்கள்

தமிழ் சினிமாவில் ரஜினிக்கு அடுத்தபடியாக ஏராளமான ரசிகர்களை கொண்டிருக்கும் விஜய் பல வெற்றித் திரைப்படங்களை கொடுத்திருக்கிறார். இவர் நடிப்பில் வெளியான திரைப்படங்கள் அனைத்தும் வசூலில் மாஸ் காட்டும். அதனாலேயே இவரை வைத்து படம் தயாரிக்க பல தயாரிப்பாளர்களும் போட்டி போட்டு வருகின்றனர்.

தற்போது விஜய் நடித்துக்கொண்டிருக்கும் திரைப்படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தயாரித்து வருகிறார். மேலும் விஜய் நடித்த பல திரைப்படங்கள் 100 கோடியை தாண்டி வசூல் செய்திருக்கிறது. அதில் சில திரைப்படங்கள் 200 கோடி வரை லாபம் பார்த்துள்ளது. அந்தப்படங்கள் என்ன என்பதைப் பற்றி இங்கு காண்போம்.

மெர்சல் அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்த இந்த திரைப்படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் பிரம்மாண்டமாக தயாரித்து இருந்தது. இதில் விஜய் உடன் இணைந்து நித்யா மேனன், சமந்தா, காஜல் அகர்வால் ஆகியோர் நடித்திருந்தனர். மூன்று கேரக்டர்களில் விஜய் நடித்திருந்த இந்த திரைப்படம் 200 கோடி வரை வசூலித்து சாதனை படைத்தது.

சர்கார் ஏ ஆர் முருகதாஸ் இயக்கிய இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்தது. இதில் விஜய்யுடன் இணைந்து கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், ராதாரவி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். அரசியல் கதை களத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த திரைப்படமும் 200 கோடி வரை லாபம் பார்த்தது.

பிகில் அட்லி இயக்கத்தில் விஜய், நயன்தாரா, யோகி பாபு, விவேக் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்து இருந்தனர். ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் சார்பில் தயாரிக்கப்பட்ட இந்த திரைப்படத்தில் விஜய் அப்பா, மகன் என்ற இரண்டு கேரக்டரில் நடித்திருப்பார். விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படம் 200 கோடி வரை வசூலித்து கல்லா கட்டியது.

மாஸ்டர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான இந்தத் திரைப்படத்தில் விஜய், மாளவிகா மோகனன், விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். எக்ஸ் பி பிலிம் கிரியேட்டர்ஸ் சார்பில் தயாரிக்கப்பட்ட இந்த திரைப்படம் 135 கோடி செலவில் உருவாக்கப்பட்டது. ஆனால் இந்தப் படம் கிட்டத்தட்ட 250 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது.

பீஸ்ட் சர்க்கார் திரைப்படத்திற்கு பிறகு சன் பிக்சர்ஸ் மீண்டும் விஜய்யை வைத்து இந்த திரைப்படத்தை தயாரித்து. நெல்சன் இயக்கிய இந்த திரைப்படம் சில வாரங்களுக்கு முன்பு பிரம்மாண்டமாக வெளியானது. இந்தப் படம் குறித்து சில நெகடிவ் விமர்சனங்கள் வந்தாலும் படம் வசூலிலும் சக்கை போடு போட்டு வருகிறது. அந்த வகையில் இப்படம் வெளியான சில நாட்களிலேயே பல கோடி வசூலித்து லாபம் பார்த்து வருகிறது.