20 வருட பகையை முடிவுக்கு கொண்டு வந்த ஏகே 63.. அஜித்துடன் இணையும் தரமான நடிகர்

அஜித் தற்போது வினோத் இயக்கும் அடுத்த திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். அவரின் முந்தைய படங்களை தயாரித்த போனிகபூர் இந்த படத்தையும் தயாரிக்கிறார். இந்தப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே அஜித் தன்னுடைய அடுத்த படத்தை பற்றிய அறிவிப்பையும் வெளியிட்டு உள்ளார்.

அவரின் 62வது திரைப்படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்க லைகா புரோடக்சன்ஸ் தயாரிக்கிறது. இந்த அடுத்தடுத்த பட அறிவிப்பால் அஜித்தின் ரசிகர்கள் தற்போது மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கின்றனர். அவர்களுக்கு மேலும் ஒரு இன்ப அதிர்ச்சியாக அவருடைய 63 வது திரைப்படத்தைப் பற்றிய தகவலும் தற்போது பரவி வருகிறது.

விசுவாசம் உள்ளிட்ட பல திரைப்படங்களை அஜித்தை வைத்து இயக்கிய சிறுத்தை சிவா மீண்டும் அஜித்துடன் இணைய இருக்கிறார். டி இமான் இசையமைக்கும் இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. தற்போது ரஜினியின் அடுத்த படத்தை தயாரிக்க இருக்கும் சன் பிக்சர்ஸ் அஜித் படத்தையும் தயாரிக்க உள்ளது.

இப்படி மெகா கூட்டணியுடன் ரெடி ஆகிக் கொண்டிருக்கும் இந்த திரைப்படத்தில் ஒரு பிரபல நடிகரும் இணைய இருக்கிறார். அவர் வேறு யாருமல்ல அஜித்துடன் பல திரைப்படங்களில் இணைந்து நடித்திருக்கும் வடிவேலு தான். இவர்கள் இருவரும் கடைசியாக ராஜா என்ற படத்தில் இணைந்து நடித்திருந்தனர்.

அந்தப் படத்தின் போது இவர்கள் இருவருக்கும் சில பிரச்சினைகள் ஏற்பட்டதால் அவர்கள் இதுவரை வேறு எந்த படத்திலும் நடிக்கவில்லை. என்னவென்றால் அஜித் மிகவும் மரியாதை எதிர்பார்ப்பவர். ஆனால் வடிவேலு அந்த படத்தில் அவரை வாடா போடா என்று மரியாதை குறைவாக பேசியது தான் அவர்களின் பிரச்சனைக்கு காரணம் என்று சிலர் கூறி வருகின்றனர்.

இதனால் கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் இவர்கள் இருவரும் இணைந்து எந்த திரைப்படமும் நடிக்கவில்லை. தற்போது அஜித் அந்த மன வருத்தத்தை எல்லாம் மறந்துவிட்டு வடிவேலுவுடன் இணைய சம்மதித்து உள்ளதாக ஒரு பேச்சு நிலவுகிறது.

மேலும் இந்தப் படம் தொடங்கப்படுவதற்கு நிறைய நேரம் இருக்கிறது. அதனால் படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள் தேர்வை படக்குழு நிதானமாக செய்து வருகிறது. அதுபோக அஜித் இந்த படத்தில் மிகவும் இளமையாக வர இருக்கிறாராம். வலிமை திரைப்படத்தின் மூலம் ரசிகர்களை நீண்ட காலம் காக்க வைத்த அஜித் தற்போது அடுத்தடுத்து பல சர்ப்ரைஸ் கொடுத்து அவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகிறார்.