20 வருடம் கழித்து மனம் திறந்த பாலா.. நந்தா படத்தில் நடிக்க மறுத்த நடிகர்

சினிமாவில் எத்தனையோ திரைப்படங்கள் வெளிவந்து இருந்தாலும் ஒரு சில திரைப்படங்கள் வெளியாகி பல வருடங்கள் கடந்த பின்னும் ரசிகர்களின் நினைவில் நிற்கும். அந்த வரிசையில் இயக்குனர் பாலா இயக்கத்தில் சூர்யா நடித்து வெளியான திரைப்படம் நந்தா.

இத்திரைப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து லைலா, ராஜ்கிரண், கருணாஸ் உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். இந்த படம் சூர்யாவின் திரை வாழ்வில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய திரைப்படமாகும். ஏனென்றால் சூர்யா அப்போதுதான் தமிழில் ஒரு சில படங்களில் நடித்துக் கொண்டிருந்தார்.

அதிலும் நேருக்கு நேர், காதலே நிம்மதி, பெரியண்ணா, பிரண்ட்ஸ் போன்ற திரைப்படங்களில் அவர் மற்றொரு ஹீரோவுடன் இணைந்து நடித்திருப்பார். சோலோ ஹீரோவாக அவர் நடித்த ஒன்றிரண்டு திரைப்படங்களும் அந்த அளவு ரசிகர்களை கவரவில்லை.

அந்தச் சமயத்தில் அவருக்கு கிடைத்த வாய்ப்புதான் நந்தா திரைப்படம். இந்த திரைப்படத்தில் அவர் ஆக்ஷன், சென்டிமென்ட் என அனைத்து காட்சிகளிலும் கலக்கியிருப்பார். இதில் நடிகர் ராஜ்கிரன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். முதலில் அந்த கேரக்டரில் நடிக்க வேறு ஒரு நடிகரை தான் பாலா முடிவு செய்திருந்தார்.

அவர் வேறு யாருமல்ல நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தான். இந்த படத்தில் அவரை நடிக்க வைக்க விரும்பிய பாலா சிவாஜியின் வீட்டிற்கு சென்று கதையைக் கூறியிருக்கிறார். கதையை முழுவதுமாக கேட்ட சிவாஜி இந்த கதை மிகவும் நன்றாக இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.

மேலும் அவர் நீங்கள் குறிப்பிட்ட அந்த தேதிகளில் எனக்கு நிறைய சொந்த வேலைகள் இருக்கிறது. அதனால் உங்களுக்கு கால்ஷீட் கொடுக்க முடியாத கட்டாயத்தில் இருக்கிறேன். என்னால் இந்த படத்தில் நடிக்க முடியாது மன்னித்துக் கொள்ளுங்கள் என்று நாகரீகமாக அந்த வாய்ப்பை நிராகரித்திருக்கிறார். அதன் பிறகு தான் பாலா அந்த கேரக்டரில் ராஜ்கிரணை நடிக்க வைத்துள்ளார்.