உன்னை சரணடைந்தேன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் சமுத்திரகனி. இப்படத்திற்கு பிறகு பல படங்களை இயக்கியுள்ளார். ஆனால் ரசிகர்களிடம் முதன்முதலில் சமுத்திரக்கனி பரிச்சயமானது நாடோடிகள் படத்தின் மூலம்தான். அதன்பிறகு சாட்டை போன்ற படங்கள் மூலம் நடிகராகும் ரசிகர்களிடம் பிரபலமானார்.

ஆனால் சினிமாவில் சமுத்திரக்கனிக்கு நடிகராக வேண்டும் என்ற ஆசைதான் முதலில் இருந்துள்ளது. அப்போது இவரை நடிகராக நடிக்க வைக்க எந்த இயக்குனரும் வாய்ப்பு கொடுக்காததால்வேறு வழியின்றி உதவி இயக்குனராக பல இயக்குனர்களின் படங்களில் பணியாற்றினார். அதன் பிறகுதான் சினிமாவில் ஒரு சில படங்களில் சிறிய சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார்.

உதாரணத்திற்கு பருத்தி வீரன் படத்தில் அமீருக்கு உதவி இயக்குனராக சமுத்திரகனி பணியாற்றி வந்தார். அந்த படத்தில் கஞ்சா கருப்பும் சமுத்திரக்கனியும் இணைந்து ஒரு சிறிய காட்சியில் நடித்திருப்பார்கள். சமுத்திரகனி முதலில் கே பாலச்சந்தரின் படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார். அப்போது கே பாலச்சந்தர் சினிமாவைப் பற்றி நிறைய கற்றுக் கொடுத்ததாக கூறினார்.

ஒருமுறை கே பாலச்சந்தர் சமுத்திரகனியை பார்த்து நீ நடிக்க வேண்டும் என்று தானே ஆசைப் பட்டு வந்தாய். வா அதையும் நானே முதலில் தொடங்கி வைக்கிறேன் எனக் கூறி பார்த்தாலே பரவசம் படத்தில் விவேக் உடன் சமுத்திரகனியை நடிக்க வைத்துள்ளார். அதன் பிறகுதான் நடிகராகவும் இயக்குனராகவும் அடுத்தடுத்து நிறைய படங்களில் பணியாற்றியது சமுத்திரகனி சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.