தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை ரெஜினா கசாண்ட்ரா. பத்திரிக்கையாளர் ஒருவர், அவரிடம் அட்ஜஸ்ட்மெண்ட் பற்றி கேட்ட கேள்விக்கு ஓபன் ஆக பதிலளித்துள்ளார்.

தற்போது சில காலமாக மீடியாவில் பெண்கள் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லைகள் பற்றி தைரியமாக பேசி வருகின்றனர். அந்த வகையில் நடிகை ரெஜினாவும் இது பற்றி மனம் திறந்துள்ளார்.

அவர் கூறியதாவது, நான் நடிக்க வந்த புதிதில் என்னிடம் ஒருவர் போன் செய்து அட்ஜஸ்ட் செய்வீர்களா என்று கேட்டார். முதலில் அவர் என்ன சொல்ல வருகிறார் என்று எனக்கு புரியவில்லை ஆனால் அந்த நபர் மூன்று முறை அட்ஜஸ்ட் செய்வீர்களா என்று கேட்டார்.

அப்பொழுதுதான் அவர் கேட்டதன் அர்த்தம் எனக்கு புரிந்தது. நான் உடனே அவரது போன் காலை கட் செய்து விட்டேன். அப்பொழுது எனக்கு 20 வயது என்று தெரிவித்துள்ளார்.

அது மட்டுமல்லாது நான் கல்லூரியில் படிக்கும்போது ஒரு நாள் ஷாப்பிங் சென்றேன். அப்போது கூட்டத்தில் ஒருவர் என் உதட்டை கிள்ளி விட்டு சென்றார். நாம் இதுபோன்ற உலகத்தில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

மேலும் திரைத் துறையில் மட்டுமல்லாது எல்லாத் துறைகளிலும் பெண்கள் இதுபோன்ற பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். ஒவ்வொரு பெண்ணிற்கும் அவர்கள் வாழ்க்கையில் இதுபோன்ற ஒரு சம்பவம் கண்டிப்பாக நிகழ்ந்திருக்கும்.

இந்த விஷயத்தில் வட இந்திய பெண்கள் அதிரடியாக தன்னால் முடியாது என்று பதிலளிப்பார்கள். ஆனால் தமிழ் பெண்களோ சற்று அமைதியாக என்னால் முடியாது என்று சொல்வார்கள் அவ்வளவுதான் வித்தியாசம் என்று அட்ஜஸ்ட்மெண்ட் பற்றி கருத்து தெரிவித்துள்ளார்.