2 விதமான சக்சஸ் மீட்.. பீஸ்ட் படம் வெற்றியா, தோல்வியா? அல்லோலப்படும் ரசிகர்கள்

சமீபத்தில் எல்லா படத்திற்கும் சக்சஸ் மீட் கொண்டாடுகிறார்கள். இதில் என்ன பெரிய குழப்பம் என்றால் எந்த படம் உண்மையாய் வெற்றிபெற்ற படம், எந்த படம் தோல்வி படம் என்பதில் ஒரு பெரிய குழப்பம் நிலவி வருகிறது.

இப்பொழுது ஒரு பெரிய குழப்பத்தில் இருப்பது beast படம் சக்சஸ் மீட் தான்.இந்த படம் வெற்றி என்பதை கொண்டாடும் விதத்தில் விஜய் வீட்டில் ஒரு பார்ட்டி நடந்தது. அது உண்மையான வெற்றியின் பார்ட்டியா அல்லது சும்மா இந்தப்படம் ஹிட் படம் தான் என்று காட்டப்படுவதற்கா என்பது தெரியவில்லை.

இப்படி இரண்டு விதத்தில் சக்சஸ் மீட் நடத்துகிறார்கள் ஒன்று மிகப்பிரம்மாண்டமாக படத்தில் பங்குபெற்ற அடிப்படைத் தொழிலாளர்களில் இருந்து ஹீரோ வரை அனைவரையும் கூப்பிட்டு ஒரு பெரிய பார்ட்டி கொடுக்கிறார்கள்.

இப்படி இருக்கும் சூழ்நிலையில் பீஸ்ட் பட சக்சஸ் விழாவை போல் சிம்பிளாக வீட்டிலேயே படத்தின் இயக்குனர் நெல்சன் திலீப்குமார், தளபதி விஜய், கதாநாயகி பூஜா ஹெக்டே, இசையமைப்பாளர் அனிருத் உள்ளிட்ட முக்கியமான ஆர்ட்டிஸ்டுகள் மட்டும் கலந்துகொண்டு சக்சஸ் மீட்டை கொண்டாடுகின்றனர்.

மேலும் இந்தப் பார்ட்டி, விஜய்-நெல்சன் கிடையே உள்ள பஞ்சாயத்தை சரிசெய்யும் விதமாக சன் பிக்சர்ஸ் இந்த பார்ட்டியை ஏற்பாடு செய்துள்ளது என்பது தான் முக்கியம். அதுமட்டுமில்லாமல் நெல்சன்-ரஜினி சன் பிக்சர்ஸ் இடையே இன்னமும் பனிப்போர் நடந்து கொண்டுதான் இருக்கிறது.

இதையெல்லாம் சரி செய்வதற்காக பார்ட்டி நடத்தப்பட்டதா அல்லது வெற்றிக் கொண்டாட்டத்திற்காக நடத்தப்பட்டதா என அவர்களுக்கு மட்டுமே தெரியும். எது எப்படியோ இந்த படம் தோல்வியா என ஆச்சரியத்திலும், இந்தப்படம் வெற்றியா என்ற சந்தேகத்தில் ரசிகர்கள் அல்லோலப்படுகின்றன.