2 வருடம் கழித்து பிக் பாஸ் நடிகரை இயக்கும் சேரன்.. மெகா கூட்டணியுடன் ரீ என்ட்ரி

தமிழ் சினிமாவில் பல அற்புதமான படங்களை கொடுத்தவர் சேரன். இவர் இயக்குனர், நடிகர், விமர்சகர் என பல பரிமாணங்களைக் கொண்டவர். இவர் இயக்கத்தில் பாண்டவர்பூமி, ஆட்டோகிராப், தவமாய் தவமிருந்து என பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்துள்ளார். நிலையில் சேரன் மூன்று தேசிய விருதுகளை பெற்றுள்ளார்.

சேரன் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 இல் பங்கு பெற்றார். இதில் லாஸ்லியா மற்றும் சேரனின் அப்பா, மகள் பாசம் பெரிய அளவில் பேசப்பட்டது. தற்போது சேரன் மீண்டும் படம் இயக்குவதில் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் விஜய் சேதுபதி மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் இருவரை வைத்து படமெடுக்க முடிவு செய்தார்.

ஆனால் இவர்கள் இருவரும் வேறு படங்களில் பிசியாக இருந்ததால் அந்த முயற்சி கைவிடப்பட்டது. இதனால் வேறு நடிகர், நடிகைகளை தேடும் முயற்சியில் இறங்கியிருந்தார். இந்நிலையில் சேரன் பிக் பாஸ் ஆரி அர்ஜுன் மற்றும் பேச்சிலர் படத்தின் நடிகை திவ்யபாரதி இருவரையும் வைத்து படம் இயக்க உள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ஆரிக்கு எக்கச்சக்க ரசிகர்கள் உள்ளனர். இந்நிகழ்ச்சி மூலம் இவர் மிகவும் பிரபலமானார். அந்நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் ஆகவும் ஆரி தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது ஆரி ஏற்கனவே மூன்று படங்களில் நடித்து வருகிறார். தற்போது சேரன் படத்திலும் ஒப்பந்தமாகியுள்ளார்.

இப்படத்தில் இரண்டாவது கதாநாயகனாக கலையரசன் நடிக்க உள்ளார். இப்படத்தில் நடிக்க உள்ள மற்ற நடிகர்களின் விவரம் விரைவில் தெரியவரும். இப்படத்தின் பூஜை நடைபெற்ற நிலையில் மிக விரைவில் படத்திற்கான படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது.

மேலும் இப்படத்தை முன்னணி நிறுவனமான சோனி லைவ் தளம் தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இப்படம் திரையரங்குகளில் வெளியாகாமல் ஓடிடி வெளியீட்டுக்கு தயாராகிறது. இந்தப் படத்தின் அப்டேட் ஆல் ஆரி ரசிகர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.