2 பாட்டுக்கு எல்லாம் நோ ஆடியோ லான்ச்.. இப்போ அதுக்கும் உலை வைத்த பீஸ்ட் படக்குழு

நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது. ஏப்ரல் 13 அன்று வெளியாக இருக்கும் இந்த திரைப்படத்தில் பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கேரக்டரில் நடித்து இருக்கின்றனர்.

அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தில் இடம்பெற்றுள்ள இரண்டு பாடல்களும் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை அதிக அளவில் கவர்ந்தது. இந்தப் படத்தின் ஆடியோ லான்ச் பிரம்மாண்டமாக நடைபெறும் அதில் விஜய்யின் பேச்சை கேட்கலாம் என்று ஆவலுடன் காத்திருந்த ரசிகர்களுக்கு சன் பிக்சர் ஆடியோ லான்ச் இல்லை என்ற ஒரு அதிர்ச்சியை கொடுத்தது.

ஏனென்றால் படத்தில் வெறும் 2 பாட்டுகள் தான் இருக்கின்றது. அதனால் இதற்கெல்லாம் எதற்கு ஆடியோ லான்ச் என்று தயாரிப்பு நிர்வாகம் அந்த பங்க்ஷனை கேன்சல் செய்து விட்டது. அதுமட்டுமின்றி கடந்த முறை நடத்திய ஆடியோ பங்ஷனில் பல பிரச்சனைகள் வந்ததை பார்த்த விஜய் இரண்டு பாடல்கள் தானே இருக்கிறது அதனால் பங்க்ஷன் வேண்டாம் என்று கூறிவிட்டாராம்.

இதனால் சன் பிக்சர்ஸ் மீது ரசிகர்கள் அதிருப்தியில் உள்ளனர். இதேபோன்று சன் பிக்சர்ஸ் தயாரித்த அண்ணாத்த, எதற்கும் துணிந்தவன் போன்ற படங்களுக்கும் ஆடியோ லான்ச் நடைபெறவில்லை. இந்நிலையில் பீஸ்ட் படத்திற்கு டீசர் வேண்டாம் டிரைலர் மட்டும் வெளியானால் போதும் என்ற முடிவில் படக்குழு இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளது.

இந்த ட்ரெய்லரை துபாயில் வெளியிடுவதற்கான வேலைகளையும் தற்போது படக்குழு படு மும்முரமாக ஆரம்பித்துள்ளது. இந்த ட்ரெய்லர் வரும் ஏப்ரல் மாதத்தின் முதல் வாரத்தில் வெளியாகும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

ஆடியோ லான்ச் பங்ஷன் நடத்தவில்லை இப்போது ட்ரெய்லரும் லேட்டாகத்தான் வரப்போகிறது என்று விஜய் ரசிகர்கள் மிகுந்த சோகத்தில் இருக்கின்றனர். இருப்பினும் பீஸ்ட் திரைப்படத்தை திரையரங்குகளில் தெறிக்க விடவும் ரசிகர்கள் இப்போதிலிருந்தே தயாராகி வருகின்றனர்.